வங்காளவிரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

தென் இலங்கை மற்றும் அதை சுற்றியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவுள்ளதாக என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது தென்மேற்கு வங்காளவிரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.ஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.

 

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கடலோரப்பகுதிகளிலும் உள்மாவட்டங்களிலும் கடும் மழைபெய்யக்கூடும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.