கொக்கட்டிச்சோலை- கற்சேனைப்பகுதியில் இளைஞன் வெட்டிக்கொலை

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்சேனை நீலண்டமடு பகுதியில் வைத்து இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று(20) மாலை இடம்பெற்றுள்ளது.
வீடொன்றில் ஏற்பட்ட தகராறின் போது, குறித்த இளைஞன் கத்தியால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கொலை செய்யப்பட்டவர் 18வயதினையுடைய அரசடித்தீவு கிராமத்தினைச் சேர்ந்த அழகுதுரை அதீஸ்காந்தன் எனவும் இனங்காணப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலையிலிருந்து, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.