தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நிலை கவலைதரும் விடயமாகும்.

தமிழ தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சியாக நீண்டகாலமாக இருந்து வந்திருக்கிறது.இன்றைய சூழலில் அதன்  பங்காளிக்கட்சிகளுக்கிடையில்  எற்பட்டுள்ள உள்ளக சூழ்நிலைகள் கவலைதரும் விடயமாக வுள்ளன.

எனவே தமிழ் கூட்டமைப்பானது இன்றைய கால சூழலில் தம்மை முறையாக புனரமைத்து மீழக்கட்டியமைக்கப்பட வேண்டும்.இதற்கான பொறுப்பு பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குள்ளதாகும்.

என திருகோணமலை மாவட்ட சிவில் சமூகம் சார்பில் நடந்த ஊடகவியலார் சந்திப்பில் கோரிக்கைவிடப்பட்டுள்ளது.;

திருகோணமலை செல்லம்மா விடுதியில் நடந்த இந்த சந்திப்பில் நீண்டகாலமாக சிவில்  சமூகபிரதிநிதியாக செயற்பட்டு வரும்  வ.தர்மபவன் இதனைத்தெரிவித்தார்.இவரது தலமையிலான குளுவினர் இச்சந்திப்பை ஏற்பாடு செய்து நடாத்தினர்.

அவர்மேலும் குறிப்பிடுகையில்,சிவில் சமூகத்தின் சார்பில் நாம் நீண்டகாலம் செயற்பட்டுவந்தாலும் இவ்வாறான ஊடக சந்திப்பை நாம் முன்னர் நடத்தியதில்லை.அனால் இன்றைய அரசியல் சூழல் காரணமாக மக்களுக்கு சிலிவிடயங்களை நாம் தெளிவு படுத்த வேண்டிய நிலமைகள் ஏற்பட்டுள்ளன.

இன்றைய காலத்தில் பரவலாக பேசப்படும் விடயமாக தமிழ் கூட்டமைப்பின் நிலப்பாடு ,அரசியல் சூழல்,வரப்போகும் தேர்தல் விடயங்கள் உள்ளன.

தமிழ் மக்களைப்பொறுத்தவரை அரசியல் சூழல் என்ற நிலையில் தமிழ் கூட்டமைப்பைபற்றித்தான் யோசிக்கின்றனர்.இக்கட்சி தமிழ் மக்களின் எக பிரதிநிதியாக பார்க்கப்பட்ட கட்சியாக உள்ளது.

அதனால் நாமும் அது பற்றித்தான் சிந்திக்கின்றோம். இக்கட்சியானது இன்றைய சூழலில் மக்களுக்க ஒரு குழப்பகரமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இக்கட்சியானது ஒரு காலத்தில் தந்தை செல்வநாயகத்தினால் உருவாக்கப்பட்ட தழர்விடுதலைக்கூட்டணிக்குப்பினர் உருவானதாகும் தமிழ் மக்களின் அரசியல் தேவை கருதி தேசியத்தலைவர் அவர்களின் வழிகாட்டலில்.ஆலோசனையின் பேரில்  உருவாக்கப்பட்ட கட்சியாகும்.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் மக்கள் முழமையான வாக்களிப்பை செலுத்தி ஆட்சியாளர்களுக்கும், சர்வதேசத்திற்கும் தமது நிலப்பாட்டை தெளிவு படுத்தி வந்துள்ளனர்.

அவ்வாறான கட்சி இன்றைய சூழ்நிலையில் ஒரு வேதனைக்குள்ளானதாகவும் ஒரு குழப்பகரமான நிலமையிலும் காணப்படுகின்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிழவு பட்டுப்போகும் நிலமையில் உள்ளமையும் வேதனைதரும் விடயமாகும். பிழவுகளை ஏற்படுத்தக்கூடிய அல்லதுஉள்ளக  அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடிய  உட்கட்சி முரண்பாடுகளும்  காணப்படுகிறது.

எனவே இந்நிலமைமாற்றியமைக்கப்பட்டு, தமிழ் கூட்டமைப்பானது இன்றைய கால சூழலில் தம்மை முறையாக புனரமைத்து மீழக்கட்டியமைத்துக்கொள்ள வேண்டும்.இதற்கான பொறுப்பு பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குள்ளதாகும்.

இது தமிழ்மக்களின் சூழல் மற்றும் காலத்தினுடைய கட்டாயமாகும்.அதனால் இன்றைய நிலையில் தமிழ் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளாக செயற்படும் கட்சிகளின்  தலமைகள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும்.

மீண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை மக்களினுடைய நம்பிக்கை;குரிய கட்சியாக மாற்றியமைக்க வேண்டியுள்ளது.இதனுடைய பொறுப்பு ஒவ்வொரு பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கு மாத்திரமல்ல. எல்லோராலும் மதிக்கப்படுகின்ற தமிழ்தேசியக்கூட்மைப்பின் தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான இராசம்பந்தனுக்கும் உரியதாகவுள்ளன.

இந்த விடயத்தில் மிகவும் அனபவம் வாயந்த மூத்ததலைவரான சம்பந்தன் ஐயா அவர்கள் தனது அர்பணிப்பான பங்களிப்பின் ஊடகா இதனை ஒழுங்கு படுத்த முன்வரவேண்டும்.

ஆனைத்து கட்சிகளையம் மீழக்கட்டியமைத்து ஒரு வரலாற்று நிகழ்வாக அவர் செயற்படுத்தவேண்டும் என்பது எமது எதிர் பார்ப்பாகும்.

உண்மையில் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் சம அந்தஸ்துள்ள நிலமையை தோற்றுவிக்கும் வகையில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

இதற்கான எழுத்துரவிலான உடன்பாடுகள் காணப்பட வேண்டும்

இது காலத்தின்தேவையாகவுள்ளன.அதேநேரத்தில் இக்கட்சியினுடைய சின்னம் ஒரு பொது சின்னமாக தெரிவ செய்யப்படலாம். இதுவும் சில சந்தர்பங்களில் கட்சிகளுக்கிடையில் பிளவுகளுக்க காரணமாக அமையலாம்.

மக்கள் பிரதிகள் தெரிவு என்பது ஒரு தெரிவக்குளவின் ஊடகா தெரிவு செய்யப்பட வேண்டும்.  இந்த தெரிவுக்குளுவானது ஒரு அரசியல் சாராதவர்களாகவும் தேர்தல் ஆர்வமில்லாதவர்களாகவும் பொது நன்மைகருதி உழைப்பவர்களாகவும் இரத்தல்வேண்டும் அவ்வாறானவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களெ இந்த வேட்பாளர்களை தீர்மானிக்கும் நிலமை ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சியாக நீண்டகாலமாக இருந்து வந்திருக்கிறது.இன்றைய சூழலில் அதன்  பங்காளிக்கட்சிகளுக்கிடையில்  எற்பட்டுள்ள உள்ளக சூழ்நிலைகள் கவலைதரும் விடயமாக வுள்ளன.

தமிழ் கூட்டமைப்பானது இன்றைய கால சூழலில் தம்மை முறையாக புனரமைத்து மீழக்கட்டியமைக்கப்பட வேண்டும்.இதற்கான பொறுப்பு பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குள்ளதாகும்.எனவும் வலியுறுத்தினார்