மட்டக்களப்பில் 36 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியவர்கள் உட்பட 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்னரென, மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியோர், நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியவர்கள், கஞ்சா வைத்திருந்தவர்கள், சந்தேகத்துக்கு இடமாக நள்ளிரவில் வீதிகளில் நடமாடியவர்கள் உள்ளிட்டோரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய, நேற்று (10) நள்ளிரவு தொடக்கம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட  விசேட வீதி சோதனை நடவடிக்கையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கை, இன்று (11) அதிகாலை 3 மணிவரையும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதென, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 19 பேர், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 3 பேர், வாகரை பொலிஸ் பிரிவில் 4 பேர், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பேர், கரடியனாறு பொலிஸ் பிரிவில் 2 பேர் உட்பட 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் கைதுசெய்யப்பட்டவர்களை, அந்தந்த பகுதிகளில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியவர்களை விசாரணையின் பின்னர் பொலிஸார் எச்சரித்து விடுதலை செய்வுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.