நாளை மட்டக்களப்புக்கு புதிய அரச அதிபர்

மட்­டக்­க­ளப்ப மாவட்ட நிரந்­தர அரச அதிபர் நிய­மனம் நாளை செவ்வாய்க்கிழமை இடம்­பெ­று­மென உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்­சரின் பிரத்­தி­யேகச் செய­லா­ளரும் அமைச்­சரின் பாரி­யா­ரு­மான திரு­மதி வஜிர அபே­வர்த்­தன தெரி­வித்தார். இருப்­பினும் அவர் அரச அதிபர் பத­விக்கு தெரி­வா­கி­யி­ருப்­ப­வரின் பெயரை வெளி­யிட மறுத்­து­விட்டார்.

 

இது­பற்றி அறி­யப்­ப­டு­வ­தா­வது, மட்­டக்­க­ளப்பு மாவட்ட அரச அதி­ப­ராக இருந்த திரு­மதி சாள்ஸ் இட­மாற்­ற­லாகி சென்­றதன் பின்னர் நிரந்­தர அரச அதிபர் பதவி காலி­யா­கவே இருந்­து­வ­ரு­கி­றது.. இப்­ப­த­வியின் நிய­ம­னத்­திற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அதி உச்ச நிர்­வா­க­சேவைத் தரா­தரம் கொண்ட மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தைச் சேர்ந்த கே. பாஸ்­கரன், எஸ்.மகேசன், ஆர்.உத­ய­குமார் ஆகி­யோரை தெரிவு செய்து அதில் ஒரு­வரை நிய­மிக்­கு­மாறு உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்த்­த­னவை கேட்­டி­ருந்­தது. இத­னி­டையில் இதே தரத்­திலும் இப்­பட்­டி­ய­லுக்கு அப்­பாலும் உள்­ளவர் இந்­நி­ய­ம­னத்­தைப்­பெற சிற்­சில செல்­வாக்­கினை பிர­யோ­கித்­த­மையால் இந்­நி­ய­ம­னத்தில் இழு­ப­றி­நிலை ஏற்­பட்டு தாம­த­ம­டைய கார­ண­மா­கி­விட்­டது.

இது­பற்றி மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் ஆளும் கட்சி அமைப்­பா­ளரும், ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாவட்ட தலை­வ­ரு­மான எஸ்.கணே­ச­மூர்த்தி கருத்து வெளி

யி­டு­கையில் அமைச்சர் வஜிர, இவர்­களில் யாரோ ஒரு­வரை நிய­மிக்க இறுதித் தீர­மானம் எடுக்­கின்ற வேளை­களில் யாழ்ப்­பாண மாவட்­டத்தைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குறுக்­கிட்­டுள்­ளார்கள். அதற்கு மட்­டக்­க­ளப்பின் சில சங்­கங்கள் கார­ண­மா­யி­ருந்­துள்­ளன. இச்­செ­யற்­பாடு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திற்கு ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. இது பல பிரச்சினை­களை இம்­மா­வட்­டத்தில் தோற்­று­விக்கும் என்ற கருத்து மக்கள் மத்­தியில் பதி­வா­கி­யுள்­ளது. இதனை யாராலும் தவிர்க்க முடி­யாது. இம் மூவருள் தரத்திலும், சேவை மூப்பிலும் முதன்மையாக பாஸ்கரனே இருக்கிறார். அவர் அரச அதிபராக வருவதை மாவட்ட மக்கள் விரும்புகின்றனர். அவரே நியமிக்கப்படவேண்டும் என்ற தனது சிபாரிசையும் தான் அமைச்சரிடம் வழங்கியுள்ளதாக கூறினார்.

virakesari