களுவாஞ்சிகுடி சைவமகா சபையின் அறுபத்தி ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு விழாவும்

களுவாஞ்சிகுடி சைவமகா சபையின் அறுபத்தி ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு விழாவும் அதன் தலைவர் கு.நகேந்திரன்  தலைமையில் சீ.மு.இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது

இவ்விழாவில் பிரதம அதிதியாக இந்துகலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எந்திரி பொன்னையா சுரேஸ், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், கிராமத் தலைவரும் முகாமை ஆலய பரிபலன சபைத் தலைவருமாகிய அ.கந்தவேள், மற்றும் விசேட அதிதிகளாக கல்முனை சைவமகாசபை தலைவர் சு.அரசரெத்தினம், நவகிரி நீர்பாசன பொறியியலாளர் மு.பத்மதாசன், மட்டக்களப்பு நீர்ப்பாசன பொறியியலாளர் கு.செந்தூரன், சீ.ஈ.சீ.வீ.நிறுவனத்தின் பொறியியலாளர் தி.இரகுராமன், வைத்தியர் ந.நிமோஜன்,; வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி வீ.குணசேகரம், வைத்தியர் ந.நிவாசன் அகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந் நிகழ்வில் பேச்சுபோட்டி, கோலம் போடுதல் பேட்டி, பண்ணிசைப் போட்டி, பஜனைப் போட்டி, போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசீல்கள் வழங்கி வைக்கப்படுவதுடன். ஓய்வு பெற்ற ஆசிரியர் பாக்கியரெத்தினம் ஆறுமுகம் எழுதிய “ சுடச்சுடரும் பொன்” எனும் நூலும் வெளியீட்டு செய்யப்பட்டது.