மண்முனை தென்மேற்கு கோட்ட ஆரம்பபிரிவு மாணவர்களின் கற்றல் உபகரண கண்காட்சி.

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட கற்றல் உபகரண கண்காட்சி போட்டியில் மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயம் முதலிடத்தினை பெற்றுள்ளது.
கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் இன்று(20) வெள்ளிக்கிழமை இக்கண்காட்சிப் போட்டி நடாத்தப்பட்டது. இதன் போது, கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளைச் சேர்ந்த ஆரம்பபிரிவு மாணவர்களும், பல்வேறு பொருட்களை கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.
குறித்த கண்காட்சி போட்டியில் மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயம் முதலிடத்தினையும் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயம் இரண்டாம் இடத்தினையும், முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
இக்கண்காட்சியை மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் மற்றும் ஆசிரிய ஆலோகர்களும் பார்வையி;ட்டனர்.