ஜனா­தி­பதி மைத்­திரி சட்­டமா அதி­ப­ருக்கு ஆலோ­சனை

அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லை­யி­லுள்ள அர­சியல் கைதி­களின் வழக்கை மீண்டும் வவு­னியா மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­று­வது தொடர்பில் சட்ட மா அதி­ப­ரூ­டாக நீதி­மன்றில் விட­யங்­களை முன்­வைக்க சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இந்தச் சந்­திப்பு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்றுப் பிற்­பகல் நடை­பெற்­றது. இதன்­போது மூன்று அர­சியல் கைதி­களின் வழக்­குகள் அனு­ரா­த­புரம் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் அதனை மீண்டும் வவு­னியா நீதி­மன்­றத்­திற்கு மாற்ற வேண்டும் எனவும் மாண­வர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

இதன்­கா­ர­ண­மாக தற்­போது யாழ்ப்­பா­ணத்தில் போராட்­டங்கள், ஆர்ப்­பாட்­டங்கள் எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் ஜனா­தி­ப­தி­யிடம் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர். இதன்­போது அனு­ரா­த­புரம் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து வவு­னியா நீதி­மன்­றத்­திற்கு வழக்கை மாற்­று­வ­தா­னது நீதி­மன்ற நட­வ­டிக்கை என்­பதால் அது தொடர்பில் சட்­டமா அதிபர் திணக்­க­ளத்­திற்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தா­கவும் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஊடாக நீதி­மன்­றத்­திற்கு இந்த விட­யங்கள் குறித்து விளக்­க­ம­ளிப்­ப­தா­கவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அது­மட்­டு­மன்றி இதன்­போது ஜனா­தி­பதி சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு ஆலோ­சனை வழங்­கி­ய­தாக ஜனா­தி­பதி செய­லகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்தச் சந்திப்பில் அமைச்சர் சாகல ரட்ணநாயக்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

virakesari