தமிழர்கள் தனிநாட்டினை கோரும் நிலைக்குத் தள்ளவேண்டாம்; சிறிதரன் எச்சரிக்கை

இனப்பிரச்சினைக்கு இதய சுத்தியுடன் தீர்வொன்றை காணப்தை விடுத்து கெட்டலோனியா, குர்திஸ்தான், ஸ்கொட்லாந்து போன்று தமிழ் மக்களும் பொது வாக்கெடுப்பொன்றை நடத்தி பிரந்துசெல்லும் நிலைக்கு அரசு தமிழர்களை தல்லுகின்றதா என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு சபையில்  கேள்வியெழுப்பியது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இலத்திரனியல் திருத்தச்சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் “இறுதியுத்தத்தின் போது பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் இராணுவத்தினரால் படுகொலைச் செய்யப்பட்டமை குறித்து பல்வேறு தொழில்நுட்ப ரீதியிலான சாட்சியங்கள் உள்ளன. தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்த மற்றும் பாலசந்திரன் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தமை போன்ற தொழில்நுட்ப ஆதாரங்கள் காணப்படுகின்றன.

அதேபோல் முல்லைத்தீவில் மக்களின் கொட்டில்களில் பொஸ்பரசு, இராசாயன குண்டுகள் வீசப்பட்டிருந்தமை குறித்த தொழில்நுட்ப ஆதாரங்கள் சர்வதேச ரீதியில் காணப்படுகின்றன. இவற்றின் அடிப்படையின் ஏன் ஓர் இதய சுத்தியுடன் தீர்வுக்கு வரமுடியாதுள்ளது.

ஈராக்கில் இருந்து குர்திஸ்தான் பிரிந்துச் சென்றது போன்றும், இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் ஸ்பெயினில் இருந்து கெட்டலோனியா பிரிந்துச் செல்ல பொது வாக்கொடுப்பொன்றை நடத்தியது போன்று தமிழர்களும் பொது வாக்கெடுப்பொன்றை நடத்தி இலங்கையில் இருந்து பிரிந்துச் செல்லும் நிலைக்கு அரசால் தல்லப்படுகின்றனரா?

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் சிறையில் உள்ளவர்கள் அரசியல் கைதிகள் அல்ல பயங்கரவாதிகள். அவர்களை விடுதலைச் செய்யக் கூடாவது என்று கூறுகின்றனர். ஒஸ்லோ, ஜப்பான். தாய்வானில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுகளின் போது இவர்கள் பயங்கரவாதிகளாக தென்படவில்லையா?

தமிழ் மக்கள் நம்பிக்கைகொண்டுள்ள சிலர் இவ்வாறான கருத்துகளை முன்வைப்பதால் இந்த நாடு சரியான பாதை எவ்வாறு பயணிக்கும்? புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு இதய சுத்தியுடன் தீர்வை காண முன்வராவிடின் பாரதூரமான விளைவுகளுக்கும் நாம் முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்“ என்றார்.