தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம்?

ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகன் என்ற அசுரனை வதம் செய்தபோது அவனுடைய கடைசி வேண்டுகோளிற்கேற்ப தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பது ஐதீகம். வட இந்தியாவில் சில இடங்களில் தீபாவளியன்று நரகாசுரனுடைய உருவங்களைக் கொளுத்தி கிருஷ்ண பகவானுடைய வெற்றியைக் கொண்டhடுவதுண்டு.
இத்திருநாளிலே எமது அக இருள் ஒழிந்து போக வேண்டுமென்றும் அக அழுக்கு இல்லாமல் போக வேண்டுமென்றும் நமது முன்னோர்கள் இக் கொண்டாட்டத்தைக் கொண்டாடினார்கள்.
நரகாசுரன் கண்ணனால் ஆட் கொள்ளப்பட்டபோது தன்னைப்போல் எல்லோரும் கண்ணன் திருவடிகளை அடையவேண்டுமென்று விரும்பினான். ஆனால் நம்மவரில் பெரும்பான்மையோர் அன்றைய தினத்தில்தான் குடியும் புலாலும் உண்டு அசுரர்களாக மாறி விடுகிறார்கள். அந்த நிலை மாறி அகத்தில் விளக்கு ஏற்றுவோமாக.
தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்ளை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. அவற்றில் சில
 இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால்இ அந்நாட்டில் உள்ள மக்கள் இராமனை வரவேற்பதற்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக இராமாயணத்தில் சொல்லப்படுகிறது.
 கிருஷ்ணன்இ நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.
 இலங்கையை ஆண்ட இராவணன்இ சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால் இராமன் இராவணனை எதிர்த்துப் போராடி இராவணனை அழித்துவிட்டுஇ சீதையை மீட்டு கொண்டு தனது தம்பியான இலட்சுமணனுடன் அயோத்திக்கு செல்லும் போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று இராமாயண இதிகாசத்தில் சொல்லப்படுகிறது.
 சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு ‘அர்த்தநாரீஸ்வரர்’ ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.
தீபாவளி என்றால் என்ன?
‘தீபம்’ என்றால் ‘விளக்கு’. ‘ஆவளி’ என்றால் ‘வரிசை’. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும்.
தீபத்தில் பரமாத்மாவும் நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம் பொறாமை தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்அதனால் தான் இதற்கு தீபாவளி என்று பெயர் வந்தது
தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும் சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.
சீக்கியர்களின் தீபாவளி
1577-இல் இத்தினத்தில் பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.
சமணர்களின் தீபாவளி
மகாவீரர் நிர்வானம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.
ஐப்பசி மாத அமாவாசைக்கு முன் வரும் திரயோதசி சதுர்த்தசி அமாவாசை அதனடுத்த கார்த்திகை சுக்கிலப்பிரதமை இந்த நான்கு நாட்களும் தீபாவளி சம்பந்தப்பட்ட நாட்களாகும். தீபாவளி என்னும் சொல்லுக்கு தீபங்களின் வரிசை என்பது பொருள். உலகில் உள்ள எல்லா இந்துக்களும் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இது மிக மிகப் பழங்காலதிருந்தே இந்துக்களின் வாழ்க்கையோடு கலந்துபோன கொண்டாட்டமாகும்.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம். அன்றைய தினம் அதிகாலையில் எல்லா இடங்களிலும் தண்ணீரில் கங்கையும் எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் குங்குமத்தில் கௌரியும் சந்தனத்தில் பூமாதேவியும் புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்..
அன்றைய தினம் எல்லா நதிகள் ஏரிகள் குளங்கள் கிணறுகளிலும் நீர்நிலைகளும் ‘கங்கா தேவி’ வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும் சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.
தீபா’வலி’யும் தமிழரும்!
உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள் விடுதலை அடைந்த நாள் வருடத்தின் முதன் நாள் கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும் வெற்றியையும் விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.
அந்த வகையயில் இன்று தமிழர்கள் கொண்டாடும் தீபாவளியும் அர்த்தமுள்ளது.
விபுலமாமணி தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா