14வருட பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்த வளங்களற்ற பாடசாலை

(திலக்ஸ் ரெட்ணம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்று கோட்டத்திற்குட்பட்ட இளைஞர் விவசாய திட்ட வெள்ளிமலை அ.த.க. பாடசாலை மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்று சாதனை படைந்துள்ளான்.
இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனான நேசதுரை வாணுஜன் 154 புள்ளிகளை பெற்று இச்சாதனையை பதிவு செய்துள்ளார்.
பாடசாலை ஆரம்பித்து 14 வருடங்களுக்கு மேலாகியும் இம்முறையே இச்சாதனை புரியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த, பாடசாலை அதிகஸ்ரப்பிரதேசத்தில் அமைந்துள்ளதுடன், போதிய ஆளணி மற்றும் பௌதீக வளங்கள் அற்ற நிலையில் இப்பாடசாலை இயங்கி வருகின்றது.