சட்டத்தரணிமூலம் ஆடாத்துக்கார்களுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

திருகோணமலை  தென்னமரவாடி கிராம தமிழ் விவசாயிகளின் காணிகளில் ஆடாத்தாக செய்கையைத் தொடரமுயற்சிக்கும் 5   ஊர்காவல் பிரிவினருக்கு   சட்டத்தரணிமூலம் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது”..

திருகோணமலை மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு எல்லையாக உள்ள பிரதேசத்தில் ,குச்சவெளிப்பிரதேச செயலகத்தின் கீழ் வரும்  பூர்வீக தமிழ் கிராமமான தென்னமரவாடி கிராமம் அமைந்துள்ளது.

இக்கிராமம் கடந்த 1985இல் ஏற்பட்ட வன்முறை காரணமாக முல்லைத்தீவு உள்ளிட்ட பல இடங்களுக்கு தென்னமரவாடி மக்கள்  இடம்பெயர்ந்தனர். குறிப்பாக கிராமத்தில்  புகுந்து தாக்குதல் நடத்தியதன் காரணமாக பலர் இறந்த நிலையில் இந்த இடம்பெயர்வு ஏற்பட்டது.

இந்நிலையில் அண்மைய இறுதி யுத்த நிறைவின் பின்னர் இம்மக்கள்  மீழக்குடியமர்த்தப்பட்டனர்.

முற்றிலும் பாரியளவில் விவசாயம்,மற்றும் கால்நடை வளர்ப்பைதொழிலாக கொண்ட இம்மக்களின் விவசாயக்காணிகள்  இடைப்பட்ட யுத்தகாலத்தில் இருந்து  ஊர்காவல்படையினரால் பலாத்காரமாக பறித்து செய்கை செய்யப்பட்டு வருகின்றது.என்ற குற்றச்சாட்டை இப்பகுதி விவசாய சம்மேளனங்கள் தொடர்ச்சியாக எழுத்துமூலமாக முன்வைத்து வந்துள்ளன.

இதுதொடர்பாக மக்கள் பல போராட்டங்களை நடாத்தியும் அதிகாரிகளிடம்முறையிட்ட நிலையில் சிலரது காணிகள் விடுவிக்கப்பட்டன. ஆயினும் இன்னும் பல காணிகள் அடாத்தாக செய்கை பண்ணப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில் கடந்த சில வாரங்களுக்குமுன்னரும்  மக்களின் பூர்விக வயல்காணிகளில் உழவு செய்து விவசாயப்பணியை அத்துமீறிய வர்கள்  ஆரம்பித்துள்ளனர்.

இதனைத்தடுக்க பொலிஸ் உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் சென்று முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட  விவசாயிகள் நீதிமன்ற நடவடிக்கைக்கு தயாராகியுள்ளனர்.

  இதன் ஆரம்பபடியாக சட்டத்தரணிமூலம்  ஆடாத்துக்கார்களுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  5  விவசாயிகளின் காணிகளில் ஆடாத்தாக செய்கையை தொடரமுயற்சிக்கும் 5 ஊர்காவல் பிரிவினருக்கே இக்கடிதம் நேற்று சட்டத்தரணிமூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.