தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் நாமே கூட்டமைப்பை கலைத்துவிடுங்கள்.

.தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் தமிழர் விடுதலை கூட்டணியினராகிய நாமே சிவராம் என்ற எழுத்தாளர் சுட்டுக்கொள்ளப்பட்டமைக்கு காரணமாணவர்கள் சில சமயம் எங்கள் மத்தியிலே இன்றும் ஊசலாடக்கூடும்..தமிழ் தேசியகூட்டமைப்பை கலைத்துவிட்டு அனைவரும் தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட வருமாறு   தமிழர்விடுதலை கூட்டணியின்    செயலாளர்நாயகம், வீ.ஆனந்தசங்கரி ஓற்றுமையை ஏற்படுத்த தமிழ் மக்களிற்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பம் என்ற ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
றிக்கையின் முழுவடிவம்.
ஓற்றுமையை ஏற்படுத்த தமிழ் மக்களிற்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பம்
மிக்க அவதானமாக பரிசீலித்ததன் பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் கவலை தருகின்றது என்றும், அதிலிருந்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதால் அக்கூட்டமைப்பை உடனடியாக கலைக்கும்படி தமிழர் விடுதலை கூட்டணி வேண்டுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் தமிழர் விடுதலை கூட்டணியினராகிய நாமே என்பதால் அவர்களின் நடவடிக்கைகள் அதனை கலைக்குமாறு கேட்பதற்கு எமக்கு சகல உரிமையும் உண்டு. தப்பான வழியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை ஒரு சிலர் சுயநலம் கருதி செயற்படுவதால் நாம் எடுக்கும் நடவடிக்கைக்கு தமிழ் மக்களின் பூரண ஆதரவை தமிழர் விடுதலை கூட்டணி கோருகின்றது. அத்தகைய ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் தமிழ் இனத்தை மீட்க முடியாத நிலைமை உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பாதுகாவலர் என்ற கருத்தை தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் நம்ப வைத்துள்ளமைக்கு முரனாக இவ்வமைப்பு தமிழ் மக்களிற்கு ஓர் சாபக்கேடாக அமைந்துள்ளது என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபனபமாகியுள்ளது. அது சிலரின் சுயநலத்திற்காக உபயோகிப்பதற்கு ஆண்டவனால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதமாக எமக்கு தோன்றுகின்றது. அந்த நிலைப்பாட்டை சாதகமாக்கி; தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரல் உருவாகும் பல நன்மைகளை ஒருசிலர் தாமே அனுபவித்து வருகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அமைந்துள்ள ஏனைய அமைப்புக்களிற்கு விரோதமாக தமிழரசு கட்சி என்ற அமைப்பு தீவிரமாக செயற்படுவது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. அவர்களில் உள்ள சிலர் கடந்த கால சம்பவங்களை தமக்கு சாதகமாக பாவித்தே தமிழரசு கட்சி ஏனையவற்றை கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரத்தை பெற்றுள்ளதாக உலகிற்கு எடுத்து காட்டுகின்றது.
தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் அவர்கள் ஆயுத போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு வந்தவர்கள் என்பதும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு வசதியை குற்றவாளியாக காணப்பட்டவர்கூட தமக்கு சாதகமாக உபயோகித்துள்ளனர்.
மிக அண்மையில் தமிழரசு கட்சி செயலாளர்நாயகம் அவர்களின் அறிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமது கட்சி மாத்திரம்தான் ஆயுதம் தாங்கி போராடவில்லை என பெருமையாக தம்பட்டமடித்ததை மக்கள் அவதானித்திருப்பார்கள். ஆனால் தமிழரசு கட்சியை ஆரம்பித்த தந்தை செல்வநாயகம் அவர்கள் தமிழர் விடுதலை கூட்டணியை ஆரம்பித்தவுடன் தமிழரசு கட்சியை செயலிழக்க வைப்பது போலவே செயற்பட்டார்.
இரண்டொரு சந்தர்ப்பங்களில் அக்கட்சியின் பெயரை பாவிக்க வேண்டிய தவிர்க்க முடியாத தேவை ஏற்பட்டது, ஆனால் 1974ம் ஆண்டு மூதறிஞர் பட்டம் வழங்குவதற்காக கட்சி பேதமின்றி வெள்ளவத்தை இராமகிருஸ்ணன் மிசன் மண்டபத்தில் நடந்த வைபவமே தமிழரசு கட்சியினுடைய வெள்ளிவிழாவாகவும் அமைந்தது. அதன்பின் தந்தை செல்வா 1977ம் ஆண்டு இறக்கும்வரைக்கும் தமிழரசு கட்சியின் நாமத்தை ஓர் இயங்கும் கட்சியாக எவரும் பாவிக்கவில்லை. 1977ம் ஆண்டு இறந்த பெரியவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளிற்கு முன்பு தொடர்க்கம் இறந்து 28 ஆண்டுகளிற்கு தமிழரசு கட்சி செயலிழந்தே இருந்தது.
தமிழர் விடுதலை கூட்டணி தலைவராக இறந்த தந்தை செல்வாவிற்கு அவர் இறந்து இரண்டு வருடங்களின்; பின் யாழ் முத்தவெளியில் நிறுவப்பட்ட தூபியின் உச்சத்தில் உதய சூரியன் சின்னமே பொறிக்கப்பட்டு உலகம் அழியும்வரை அத்தூபி அழியாது என்பதையும் மக்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன். ஆகவே தமிழரசு கட்சியின் நாமத்தை உச்சரிப்பது, புத்துயிரளிப்பது, அக்கட்சியின் பெயரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் அத்தனையும் சட்டவிரோதமானவை என்பதை வற்புறுத்தி கூற விரும்புகின்றேன்.
இப்படியான நிலைமையில் தமிழரசு கட்சி தான்தோன்றித்தனமாக செயற்படுவதும், தந்தை செல்வா, ஜி ஜி பொன்னம்பலம் போன்ற பெரியார்களால் உருவாக்கப்பட்டு இன்றும் நிதானமாக செயற்படும் கட்சியாகிய தமிழர் விடுதலை கூட்டணியை எதுவித அதிகாரமும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக விலக்கி வைப்பதும், கூட்டமைப்பில்; இணைந்துள்ள ஏனைய பங்காளிகளை உதாசினம் செய்வதும் இன்னும் இது போன்ற பல விடயங்களில் தமிழரசு கட்சியின் செயற்பாடுகள் நாற்றமெடுக்கின்றன. இப்படி செயற்படுவதற்கு இவர்களிற்கு எவரும், எந்த அமைப்பும் அதிகாரம் வழங்கவில்லை.
பொது மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது என்றும், அவ்வமைப்பு விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலும், அவர்களின் வழிநடத்தலிலும் இயங்கி வருகின்றது என்ற மாஜையை மக்கள் மத்தியில் பரப்பி  மோசடி மூலம் கைப்பெற்றிக்கொண்ட அதிகாரத்தை வைத்தே இன்றும் இவர்கள் தமிழ் மக்களை மிரட்டி தம்மிஸ்டம்போல் செயற்படுகின்றார்கள்.
2004ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அதாவது 13 ஆண்டுகள் மக்களை ஏமாற்றியதற்கு இவர்கள் இன்றைக்கேனும் பதில் கூறியாக வேண்டும். ஏனெனில், இவர்களின் கூற்றுக்கள் நடைமுறைகள் அத்தனையும் பொய்யென நிரூபிக்க மிக நம்பிக்கையாக ஓர் ஆவணம் என்கையில் சிக்கியுள்ளது. தராக்கி என அழைக்கப்படும் சிவராம் என்ற எழுத்தாளர் நேர்மையான சிறந்த நாட்டுப்பற்றாளன். புலிகளையும் மக்களையும் ஒன்றிணைத்து செயற்படவைக்க கனவு கண்டவர். அவர் 2015ம் ஆண்டும் சுட்டுக்கொள்ளப்பட்டமைக்கு காரணமாணவர்கள் சில சமயம் எங்கள் மத்தியிலே இன்றும் ஊசலாடக்கூடும்.
13 ஆண்டு காலமாக என்னால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றாக திரு தராக்கியினுடைய 2004ம் ஆண்டு மாசி மாதம் 11ம் திகதி ஆங்கில பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை என் கூற்றுகளிற்கு சிறந்த ஆதாரமாக என்கைவசம் உள்ளது. ஏவர் விரும்பினாலும் அதன் பிரதியை என்னால் வெளியிட முடியும். அவருடைய கட்டுரையில் மிக தெளிவாக கூறியிருப்பதாவது ‘தமிழ் தேசிய கூட்டமைப்பு உண்மையில் எப்படியோ அதிலும் பார்க்க கூடுதாக மிகைப்படுத்தியே காட்டப்படுகின்றது என்றும,; விடுதலைப்புலிகளாலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு வழிநடத்துகின்றது என்பது பெரும் மாஜை என்றும், சில முன்னணி அரசியல் தலைவர்கள் மனச்சாட்சிக்கு விரோதமாக பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்றனர். அவர்களில் சிலர் தமிழ் மக்களின் போராட்டங்கள், அபிலாசைகள் ஆகியவற்றில் எவ்வித அக்கறையும் இல்லாதவர்கள் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், அது விடுதலை புலிகளின் அதிகாரம் என்று கருதுவது உண்மைக்கு மாறானது என்றும், வடக்கு கிழக்கில் ஆதரவு தேடும் குழுக்கள், தமிழ் கட்சிகள், அமைப்புக்கள் ஆகியன தங்களிடையே காணப்படும் ஆழமான வேறுபாடுகளையும் மறந்து நீண்ட காலம் இராணுவத்துடன் தொடர்புகள் கொண்டிருந்ததையும் உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டுகளையும் பொருட்படுத்தாது ஒரே கிளையின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும், தமிழர் விடுதலை கூட்டணி பிரமுகர் ஒருவர் ஈபிஆர்எல்எப், ரெலோ ஆகியவற்றை கூட்டமைப்பில் இணைப்பதை விடுதலை புலிகள் விரும்ப மாட்டார்கள் என்றும், கிழக்கு மாகாண விடுதலை புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் ஈபிஆர்எல்எப், ரெலோ ஆகியவற்றை கூட்டமைப்பில் இணைத்துக்கொள்வதில் விடுதலைப்புலிகளிற்கு எவ்விதமான மறுப்பும் இல்லை என்றும், அவ்விரு குழுக்களையும், புளொட் இயக்கத்தையும் ஒரே குடையில் கொண்டு வர வேண்டும்” என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்று சகல கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் ஒரே கொள்கையோடு உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அந்த அமைப்புக்கள் தீர்மானித்திருந்தன. அதற்கு முழு ஆதரவையும் விடுதலை புலிகளும் தெரிவித்திருந்தது. ஏத்தனையோ விடயங்கள் என் கருத்திற்கு ஆதரவாக தெரிவிக்க முடியும். இவ்வறிக்கை விடும் நோக்கத்தை கூறி தமிழ் மக்களின் ஆதரவை தமிழர் விடுதலை கூட்டணி வேண்டி நிக்கின்றது.
பின்வரும் விடயங்கள் மிக தெளிவாகின்றது. சகல கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கட்சியாக, ஒரு கொள்கையுடன், ஒரே சின்னத்தில் 2004ம் ஆண்டு போட்டியிடுவதற்கு சின்னத்தில் பிரச்சினையை கிளப்பியிருந்த கடைசி நேரத்தில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட தமிழ் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. விடுதலை புலிகளும், ஏனைய பல அமைப்புக்களும், போராட்டக்குழுக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கின. ஆயுத குழுக்களாக இயங்கிய ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட் ஆகிய அத்தனை குழுக்களும் இணைந்து செயற்படுவதற்கு தமிழர் விடுதலை கூட்டணி பொருத்தமானது என்பதை அவர்களது மனச்சாட்சியே கூறும். தமிழர் விடுதலை கூட்டணி பழம்பெரும் தலைவர்களாகிய பொன்னம்பலம், செல்வநாயகம் தொண்டமான் போன்றோரின் வழிநடத்தலில் இயங்கி இன்றுவரைக்கும் எதுவித களங்கத்தையும் தமக்கோ, தம்மினத்திற்கோ ஏற்படுத்தாத கட்சியாகும்.
ஆகவே தந்தை செல்வா, அமரர் ஜி ஜி பொன்னம்பலம், மலையக பெரும் தலைவர் தொண்டமான், திருவாளர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோர் ஒன்றிணைந்து ஒரே காலத்தில் உருவாக்கி வளர்த்தெடுத்த கட்சியில் நம்பிக்கை வைத்து எதிர்வரும் தேர்தல்கள் அத்தனையிலும் ஒன்றிணைந்து போட்டியிட இணையுமாறு தமிழர் விடுதலை கூட்டணி அழைப்பு விடுக்கின்றது.
தேர்தல் முடிந்ததும் வெற்றி பெற்ற அத்தனைபேரும் ஏனைய பிரமுகர்களும் இணைந்து தமிழர் விடுதலை கூட்டணியையுடன்  இணைக்கப்படுவதுடன், தலைவர்களின் இலட்சியத்திற்கமைய செயற்படுவார்கள்.
திருவாளர் தராக்கி, விடுதலைபுலிகள், பொது அமைப்புக்கள் ஆகியோரின் அபிலாசைக்கிணங்க 2004ம் ஆண்டு பொது தேர்தலில் போட்டியிட்டிருந்தால் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமோக வெற்றியிட்டியதோடு தொடர்ந்து 5 வருடங்கள் இடம்பெற்ற யுத்தம் நிறுத்தப்பட்டு அக்காலத்தில் ஏற்பட்ட 50ஆயிரம் தொடக்கம் ஒருலட்சம்வரையான அப்பாவிமக்கள், போராளிகள், இராணுவம் ஆகியோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பதோடு, பல கோடி சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். இந்த நிலைமை ஏற்பட யார் காரணம் என்பதை மக்களே ஆராய்ந்து எமது வேண்டுகோளிற்கிணங்க எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணி மீண்டும் வலியுறுத்துகின்றது.
வீ.ஆனந்தசங்கரி           செயலாளர்நாயகம்,           தமிழர்விடுதலை கூட்டணி