கிழக்கு வாழ் முஸ்லிம் படைப்பாளிகள் சிலரின் கவனத்திற்கு.

தமிழ்தேசிய விடுதலைப் போராட்டம் , பல்வேறு சரிகளையும் – தவறுகளையும் கொண்டே பயணித்தது.

எமது சக சகோதரர்களான முஸ்லீம் சமூகத்தின் மீதான அராஜக நடவடிக்கைகள், வன்முறைகள் கொலைகள் என அனைத்தும் உள்ளடங்கியிருந்தது.

இந்த மாபெரும் தவறுகளுக்காக தமிழ் சமூகத்தின் பெரும்பான்மை மக்களும், அதன் சார்ந்த படைப்பாளிகள்- கலைஞர்கள் -மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், அரசியலாளர்கள் என்போர் எல்லாம் கவலைகளையும், கண்டனங்களையும், மன்னிப்புக்களையும் தெரிவித்தே வந்துள்ளனர்.

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனை என்பதும், அவர்களின் சுதந்திரம் – விடுதலை என்பதும் , புலிகளின் நடவடிக்கைகளும் ஒன்றல்ல.

ஆனால் , உங்களைப்போன்ற ஒரு சிலர் புலிகளின் மீது கொண்ட வன்மத்தால் , தமிழ் மக்களின் உரிமைகளை- போராட்டத்தை பலவீனப்படுத்தும் திட்டமிட்ட செயற்பாடுகளில், பரப்புரைகளின் ஈடுபட்டு வரும் உங்களின் “நுண் அரசியலை” , கவனம் கொண்டு அவதானிக்கும் ஒருவரால் நிச்சயமாக
புரிந்துகொள்ள முடியும்

.வடக்கு- கிழக்கு முரண்பாடுகளை கூர்மைப்படுத்தல், சாதிய முரண்பாடுகளை ஊக்கப்படுத்தல், புலிகளின் கொலைகளை தமிழ் மக்கள் செய்ததாக பிரச்சாரம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை அவதானம் கொள்ள முடிகின்றது.

ஒருபக்கம், தமிழ் மக்களோடு மிக நெருக்கமான உறவு இருப்பதான பாவனைகளைக் காட்டிக் கொண்டு, மறுபுறம் மிகவும் நயவஞ்சகத்தனமான அரசியலை , உங்களைப் போன்ற ஒருசிலர் கிழக்கில் செய்கின்றீர்கள் .

முஸ்லீம் -தமிழ் உறவுகள் ஆரோக்கியமான முறையில் பலப்படுத்தவேண்டிய நீங்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கின்றது.

Ashok-yogan Kannamuthu