மட்டு குப்பை பிரச்சினை வழக்கு மீண்டும் 14 நாட்களுக்கு ஒத்தி வைப்பு

மட்டக்களப்பு மாநகர சபையினால் திருப்பெருந்துறை பகுதியில்  கொட்டப்படும் குப்பைகள்  மற்றும் கழிவுகளை நிறுத்தக்கோரி திருப்பெருந்துறை பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் .

 

இந்த நிலையில்  இதனை தடை செய்யக்கோரி  கிராம மக்களினால் கடந்த30.08.2017  புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல்  செய்தனர்

திருப்பெருந்துறை கிராம மக்களினால் தாக்கல் செய்யப்பட  மனுவை  31.08.2017   வியாழக்கிழமை  விசாரணைக்கு எடுத்துகொன்ண்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபது மாணிக்கவாசகர் கணேசராஜா மட்டக்களப்பு மாநகர சபையினால் திருப்பெருந்துறை பகுதியில்  கொட்டப்படும் குப்பைகள்  மற்றும் கழிவுகளை இடை நிறுத்துமாறு  14.09.2017 ஆம் திகதி வரை 14  நாட்களுக்கு இடைக்கால தடை உத்தரவினை  பிறப்பித்திருந்தார்

இந்த நிலையில் இன்று (14) வழக்கினை  விசாரணைக்கு  எடுத்துக்கொண்ட  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா குறித்த வழக்கு தொடர்பான  ஆவணங்களை   சமர்பிக்கப்படாத காரணத்தினால் குறித்த வழக்கினை தொடர்ந்து 14  நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளார் .

குறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 28 .09.2017   மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது