ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தேரோட்ட பெருவிழாவின் முன்னேற்பாடுகளின் சில நிகழ்வுகள்.

சோழர் காலத்து வரலாற்றைக் கூறும் இரு தேர்கள் ஒருங்கே அமைந்த சிறப்பு மிக்க சிவனாலயமாகிய கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இவ்வாண்டுக்கான தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்நேரத்தில் அடியார்கள் கூட்டம் ஆலயத்தை நோக்கி வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். இன்னும் சில மணித்தியாலங்களில் எம்பெருமானுக்குரிய பூசை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் ஆலயத்திற்கு வருகை தரும் அடியார்களுக்கு பல அமைப்புக்களால் தாக சாந்திகளும் அன்னதான சபையினரால் அன்னதானமும் வழங்கப்படுகின்றது.