திருமங்கலாய் சிவன் கோயிலில்அகழ்வாய்வுப் பணியில் தமிழ் அதிகாரிகளை ஈடுபடுத்தவேண்டும்

திருமங்கலாய் சிவன் கோயிலில்அகழ்வாய்வுப் பணியில் தமிழ் அதிகாரிகளை ஈடுபடுத்தவேண்டும் என்றும் மக்கள் சுதந்திரமாக சென்று ஆலயத்தில்  வழிபடுவதற்கு தடைகள் ஏற்படுத்தக்கூடாது என்றும்மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் கோரிக்கை விடுத்தார்..

திருகோணமலை தெற்கே சுமார் 60 கிலோ மீற்றர் துாரத்தில்  உள்ள   திருமங்கலாய் சிவன் கோயிலில் அகழ்வாய்வுப் பணிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெறுகின்றன.

இச் சம்பவத்தை கேள்வியுற்று  மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் நேற்று சென்றிருந்தார்.

.அவ் இடத்தில் நேற்றைய தினம் அகழ்வாய்வுகள் விடுமுறை தினம் என்பதனால் நடைபெறவில்லை.கற்களில் இலக்கம் இடப்பட்டிருந்தது.நிலம் அகழப்பட்டு குறிகள் இடப்பட்டிருந்ததன..கயிறுகள் பிரித்து கட்டப்பட்டிருந்தது.

மாகாண சபை உறுப்பினர் அப் பிரதேச மக்களிடம் நிலைமைகளை கேட்டறிந்தார்.

திருகோணமலை தொல்பொருட்திணைக்கள பணிப்பாளரான சுமனதாஸ வுடன் தொடர்பு ஏற்படுத்தி கதைத்தார்.30நாட்கள் அகழ்வாய்வுக்கான எல்லைபடுத்தல் வேலைகள் நடைபெறும் என்றும் அதன் பின்னர் அகழ்வாய்வுகள் தொடங்கும் என்று கூறினார்.

மாகாணசபை உறுப்பினர் அகழ்வாய்வுப் பணியில் தமிழ் அதிகாரிகளை ஈடுபடுத்தவேண்டும் என்றும் மக்கள் சுதந்திரமாக சென்று வழிபடுவதற்கு தடைகள் ஏற்படுத்தக்கூடாது என்றும் கூறினார்.

அத்தோடு அகழ்வாய்வுப் பணிகள் தொடர்பான அறிக்கையினை மக்கள் பிரதிநிதிகளுக்கு சமர்ப்பிக்கபடவேண்டும் என்று வலியுறுத்தினார்.

திருமங்கலாய் சிவன் கோயில் எம் இனத்தின் தொன்மையை காட்டுகின்ற ஆதாரமாகும் இதை காப்பாற்றுவது அனைவரதும் கடமையாகும்.

ஈச்சிலம்பற்று பிரதேச செயலகப் பரிவில் உள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதிக்கு இந்தியாவின் மன்னர் பரம்மரையைச் சேர்ந்த சிங்கபூதரன் என்ற மன்னன் அயோத்தியிலிருத்து கப்பலில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்திருங்கியுள்ளான்.அப்போது அப்பகுதியை ஆண்டு வந்த எழில்வேந்தன் என்ற மன்னன் அவனுடைய தங்கை திருமங்கை.

திருமங்கையை சிங்கபூதரன் திருமணம் செய்து கொண்டான். திருக்கரையம்பதி எனும் இவர்களுடைய ஆட்சிப்பகுதியில் ஓர் மலையில் தனது அரண்மனையை அமைத்து ஆட்சி செய்து வந்தார்கள் அவ்வாறு அவர்கள் அரண்மனை அமைத்த இடம் இரணியன் குன்று என்று அழைக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் அப்பெயர் இன்று இரணியன் கொட்டு என்று திரிபடைந்து வழக்கில் உள்ளது.

இந்த மன்னன் சிங்கபூதனும் மனைவி திருமங்கையும் அமைத்த ஆலயமே திருமங்கலாய் சிவனாலயம் என்று வரலாறு சான்று பகிர்கிறது.தற்போதய சேருவில பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட ஆதிஅம்மன் கேணி காட்டுப்பகுதியிலேஇவ்வாலயம் தற்போது எல்லையிடப்பட்டள்ளது.

இவ்வாலயம் அன்று ஏற்பட்ட மகாவலி கங்கை பெருக்கெடுத்த வெள்ளத்தினால் அல்லது கடற்கோள் ஒன்றினாலோ அழிவடைந்திருக்க வேண்டும் என எண்ணத்தோன்றுகிறது காரணம் மகாவலி கங்கையை மையப்படுத்தி மாபெரும் சைவ சாமராஜியமே அப்பகுதிகளில் இருந்துள்ளதற்கு இன்றும் இப்பகுதிகளில் பல எச்சங்கள் காணப்படுகிறது.எனினும் அது தொடர்பாக அறிந்திட முடியாத அளவு அழிந்துள்ளதானால் இவ்வாறு பேர் அனர்த்தம் ஒன்று அன்று உருவாகி இருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.

இந்தஆலயம் தொடர்பான ஆய்வை யாழ்பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் புஸ்பரட்ணம் அண்மையில் ஆய்வுக்குட்படுத்தி வெளியிட்டிருந்தார்.