கருணாவின் விசாரணைகள் நிறைவு.

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 9 கோடி பெறுமதியான குண்டு துளைக்காத வாகனம் ஒன்றைத் தவறான முறையில் பாவித்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவு இன்று நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது.

விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. விசாரணைகள் தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெறப்படவிருப்பதாக நிதி மோசடி விசாரணை பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளைச் சந்தேக நபர் தொடர்பில் இதுவரை சட்ட மா அதிபர் மூலம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக் கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

(DC)