இலங்கை கல்வி நிருவாக சேவை 2ற்கு நஜீம் தரமுயர்வு!

(காரைதீவு   சகா)
 
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல்நஜீம் இலங்கை கல்வி நிருவாக சேவையில் தரம் 2ற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக்கடிதத்தை கல்விச்சேவை ஆணைக்குழுவின் பொதுச்சேவை ஆணைக்குழு அனுப்பிவைத்துள்ளது..
 
கடந்த 12.03.2017இல் இருந்து  அமுலுக்குவரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 
கடந்த 3வருடங்களுக்கு மேலாக  சம்மாந்துறை கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தியில் கணிசமான பங்காற்றிவரும் ஜனாப் நஜீம் மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவராவார். இவரது காலத்தில் இவ்வலயம் தேசியமட்டத்தில் பல சாதனைகளைப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
விவசாயவிஞ்ஞானப் பட்டதாரியான இவர் அண்மையில் புலமைப்பரிசில்பெற்று பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்திற்கு  சென்றுவந்திருந்தார்..
 
 
இ.க.நி.சேவை தரம் 3 இல் பத்துவருட சேவையை எவ்வித இடர்பாடுகளுமின்றி தடைதாண்டல் பரீட்சைகளில் சித்தியெய்தி பரிபூரணமாக பூர்த்திசெய்யும் ஒரு அதிகாரியின் விண்ணப்பம் உரிய அதிகாரிகளின் அங்கீகாரங்களுடன் கல்விச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்படும்;.
 
அங்கு இடம்பெறும் பரீசீலனையின்பின்னர் இந்நியமனம் இடம்பெறுவது வழக்கம். ஆனால் தரம் 2இலிருந்து தரம் 1ற்கு பதவியுர்வு பெறுவதானால் நேர்முகப்பரீட்சைக்குத்தோற்றி அதில் சித்தியடையவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.