களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் விபத்துகடையொன்று முற்றாக சேதம்

(kulathees)
களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் நேற்று இடம் பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் கடையொன்று முற்றாக சேதம் அடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

 கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி சென்று கொண்டிருந்த பட்டா ரகா வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கடையுடன் மோதியதனாலையே குறித்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
  குறித்த விபத்து சம்பவத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு முன்னாள் அமைந்துள்ள கொமினிகேசன் ஒன்றே குறித்த விபத்து சம்பவத்தில் முற்றாக சேதமடைந்துள்ளது. இதனால் தனக்கு சுமார் பத்து இலட்சங்களுக்கு மேல் நஷ்ரம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்தார்.