களுவாஞ்சிகுடியில் அதிரடி வாகனபரிசோதனை நான்கு வாகனங்களுக்கு வீதியில் பாவிப்பதற்கான தடை

(Kulathees)
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ர மோட்டார் வாகன பரிசோதகரினால் களுவாஞ்சிகுடியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி வாகன பரிசோதனை நடவடிக்கையின் போது நான்கு வாகனங்களுக்கு வீதியில் பாவிப்பதற்கான தடை உத்தரவு வழங்கப்பட்டதுடன் வாகனத்தின் ஆண்டு அனுமதிப்பத்தரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ர மோட்டார் வாகன பரிசோதகர் ஏ.எல்.எம்.பாறுக் அவர்களின் தலைமையில் களுவாஞ்சிகுடி போக்கவரத்து பொலிசாரும் இணைந்தே குறித்த வாகன பரிசோதனைi நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்;.
இச் சோதனை நடவடிக்கையின் போது  மோட்டார் வாகனங்களின் அனைத்து பொறிமுறைகளும் மோட்டார் வாகன சட்டதிட்டங்களுக்கு அமைவாக உள்ளதா என்பது தொடர்பில்  பரிசோதகரினால் பரிசோதிக்கப்பட்டது.
  இதன்போது பதினைந்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.  மோட்டார் வாகன சட்டதிட்டங்களுக்கு  முரணணான வகையில் காணப்பட்ட நான்கு வாகனங்களுக்கே இத்தடை உத்தரவும் ஆண்டு அனுமதிப்பதிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக மோட்டார்வாகன பரிசோதகர் இதன்போது தெரிவித்தார்.
  எதிர்காலத்தில் விபத்துக்களை குறைக்கு பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலும் இவ்வாறான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார.;