கிழக்கு மாகாணத்தில் உள்ள இயற்கை வழங்கல் திட்டமிட்ட முறையில் சூரையாடப்படுகின்றது

கிழக்கு மாகாணத்தில் உள்ள இயற்கை வழங்கல் திட்டமிட்ட முறையில் சூரையாடப்படுகின்றது என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவரும் இணைந்த நிறுவனம் அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான எஸ்.லோகநாதன் விசனம் தெரிவிக்கின்றார்..

அண்மையில் சக்தி  ஊடகவியலாளர் வாகனேரி பிரதேசத்தில் வைத்து இனம் தெரியாதவர்களினால் அச்சுறுத்தப்பட்ட செய்தியின் பின்னர் ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட அறிக்கையிலே அவர் இவ்வாறு கூறினால்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

கோறலைப்பற்று கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாகனேரி பிரதேசத்தில் மண் அகழ்வுகள் திட்டமிட்ட முறையில் நடைபெறுவதை நாம்  ஊடகங்கள் வாயிலாக அவதானிக்க முடிகின்றது இதற்கு உடந்தையாக சில அரச ஊழியர்களும் துணை போவதாகவும் அறிந்தோம் ஆனால் எங்களது வழங்கல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை கொண்டுவருவதற்கு நானும் ஒரு காரணமாக அமைந்தேன் 109 தலைவர்கள் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கொழும்பில் வைத்து கைச்சாத்திட்டுள்ளோம் அதன் பிரகாரம் நல்லாட்சி அரசாங்கத்தினை கொண்டுவந்தோம்.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் காணி சுவிகரிப்பு மண் அகழ்வு போன்ற விடயங்கள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நடைபெறுகின்றது அதில் அரச ஊழியர்களை அச்சுறுத்தியும் துப்பாக்கி சூட்டு நடத்தியும் இச் செயற்பாடுகள் நடைபெறுகிறது. இதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது ஏன்னென்றால் கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அச்சுறுத்தல் ஊடகவியலாளர்கள் கடத்தல், கொலைகள் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகள் நடைபெற்றன அதனை கண்டித்து நாம் ஆர்ப்பாட்டம் நடத்திய போது என்னை சிலர் அச்சுறுத்தினர் 30 வருட யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் பின்தங்கி வாழ்கின்றனர் எங்களது வழங்களும் சூரையாடப்படுகின்றன ஏன் இந்த அரசாங்கம் இதனை கண்டுகொள்ளவில்லை மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி தலைவரும்  இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டு இதற்கு முடிவு கொண்டுவர வேண்டும்.

இன்று இந்த மண் அகழ்வு சட்டவிரோத செயல் தொடர்பாக சக்தி செய்திக்காக தகவல் சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டு அவரது தொலைபேசி மற்றும் புகைப்படக்கருவிகள்  பறிக்கப்பட்டு அங்கு உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஊடகம் என்பது சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயற்படும் ஓர் துறையாகும் இவர்களுக்கே இப்படியான நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு எவ்வாறு இருக்கும் ஆகையினால் இவருக்கு ஏற்பட்ட அநீதிக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் படியும் சட்டவிரோத செயல்களை நிறுத்தும் படியும் தகுந்த அரச அதிகாரியிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவரும் இணைந்த நிறுவனம் அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான எஸ்.லோகநாதன் கருத்துத் தெரிவித்தார்.