இனிமேல் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களை அடிமையாக வாழ நான் அனுமதிக்க மாட்டேன்.

80 வீதம் தமிழ் மக்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமத்துவம் பேணப்படுகின்றதா

இனிமேல் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களை அடிமையாக வாழ நான் அனுமதிக்க மாட்டேன்.கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அதிக ஆசனம் இருந்தபோதும் புரிந்துணர்வு அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் உடன் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் ஆட்சி அமைத்தன.ஆனால் 80 வீதம் தமிழ் மக்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமத்துவம் பேணப்படுகின்றதா என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கேட்கின்றேன்..

இவ்வாறு தெரிவித்துள்ளார்தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன்  .

பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று திங்கள் காலை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் . உதயசூரியா தலைமையில் இடம்பெற்றது.

வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மேலும் உரையாற்றுகையில்

மட்டக்களப்பு மாவட்டத்தை வீதியால் செல்லும்போது இலேசாக இனம் காணலாம் .உடைந்த வீடுகள்.பழைய கட்டிடங்களை கொண்ட பாடசாலைகள்.மின்விளக்கு இல்லாத உடைந்த வீதிகளை கண்டால் அது மட்டக்களப்பு மாவட்டம்.இது தான் கிழக்கு மாகாணத்தின் நிலை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள்.செய்ய முடியாவிட்டால் அரசியல் எதற்கு.கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அதிக ஆசனம் இருந்தபோதும் புரிந்துணர்வு அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் உடன் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் ஆட்சி அமைத்தன.ஆனால் 80 வீதம் தமிழ் மக்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமத்துவம் பேணப்படுகின்றதா என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கேட்கின்றேன்.

மனோகணேசன் ஏன் மட்டக்களப்பிற்கு வந்தான் என எந்த ஒரு அரசியல்வாதியும் கேட்க முடியாது.இனிமேல் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களை அடிமையாக வாழ நான் அனுமதிக்க மாட்டேன்.

சம்பந்தன் ஐயா நல்ல தலைவர்.அரசியல் ஊடாக உரிமையை பெற முயற்சி செய்து வருகின்றார்.ஆனால் அபிவிருத்தியும் வேண்டும்.அபிவிருத்தி மாத்திரம் போதாது.உரிமையும் வேண்டும்.இரண்டும் சமமாக செல்ல வேண்டும்.அன்று இக்கட்டான காலகட்டத்தில் என்னுடன் சேர்ந்து குரல் கொடுத்தவர் அமரர் ரவிராஐ்.லசந்த விக்கிரமதுங்க.விக்கிரமபாகு கருணாரத்ன.ரவிராஐ் லசந்த போன்றோரை கொன்றார்கள்.என்னை கொல்ல முடியவில்லை.

இன்று நான் உள்ளது மைத்திரி அரசாங்கத்தில்.அன்று மைத்திரியை எதிர்த்தவர்கள் மகிந்தவுடன் இருந்தவர்கள் இன்று அமைச்சராக இருந்து கொண்டு குழி பறிக்கிறார்கள்.இருந்து விட்டுபோகட்டும்.மைத்திரியை கொண்டுவர இந்த அரசாங்கத்தை கொண்டு வர எவ்வாறு முயற்சித்தேன் என்பது பிரதம மந்திரிக்கு நன்கு புரியும் என்றார்.

நிகழ்வில்கல்முனை சுபத்திராராம விகாரையின் விகாராதிபதி ரன்முதுகல சங்கரத்தின தேரர் சிறப்பு  அதிதியாகவும் கலந்துகொண்டார்.

நன்றி முகப்புத்தகம்

Samythamby Raviinthiran