காஞ்சிரங்குடாவில் மரணித்த தாய் – நடந்தது என்ன?

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராமத்தினைச் சேர்ந்த தாய் ஒருவர், கடந்த 28ம் திகதி அதிகாலை மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அன்றைய தினமே குறித்த நபருக்கேற்பட்ட வலிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் ரி.தவனேசன் தெரிவித்தார்.
தாய் ஒருவர், இறந்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்தி தொடர்பில் இன்று(04) திங்கட்கிழமை வினாவிய போதே இதனைக் குறிப்பிட்டார்.
மகிழடித்தீவு வைத்தியசாலையில் இருந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ள நிலையிலேயே குறித்த தாய், நேற்று(03) ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.