மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளர்கள் தங்களது கடமையை பொறுப்பேற்பதில் தாமதம்

(kamal)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு பிரதேச செயலகங்களுக்கு பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர்கள் தமது  கடமையை பொறுப்பேற்பதில் தாமத நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது..

கோரளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) ஏறாவூர் நகர் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு நியமிக்கப்பட்ட பிரதேச செயசெயலாளர்களே தங்களது கடமையை பொறுப்பேற்பதில்; தாமத நிலை ஏற்பட்டுள்ளது.
 வவுணதிவு பிரதேச செயலகத்தில்  உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிவந்த சு.ராஜ்பாவு  ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக  கடந்த ஏழாம் மாதம் இடம் மாற்றப்பட்டிருந்தார். அதேபோன்று  அம்பாரை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த கரன்  ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக  சென்றமாதம் நிமிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இவர்கள் இருவரும் தங்களது கடமையை இதுவரை பொறுப்பேற்கவில்லை  இருவரும் இலங்கை நிருவாக சேவை தரம் ஒன்றை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சு.ராஜ்பாவு என்பவர் தொடர்ந்தும் வவுணதீவு பிரதேச செயலகத்தில் உதவிப்பிரதேச செயலாளராக கடமையாற்றி வருவதுடன். கரன் அவர்கள் மட்டக்களப்பு கச்சேரியில் இணைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
  குறித்த பிரதேச செயலாளர்களுக்கு பொதுச்சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வுடன் கூடிய இடமமாற்றத்தின் பிரகாரம் ஏன் அவர்கள் குறித்த பிரதேச செயலகங்களில் தங்களது கடமையை பொறுப்பேற்க முடியாத நிலை தோன்றியுள்ளது என்பது தொடர்பபில் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது…