இலங்கை பொறியியலாளர் சேவைக்கு விண்ணப்பம் கோரல்

இலங்கைப் பொறியியலாளர்  சேவையின் IIIஆம் தரத்துக்கு அலுவலர்களை சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை தொடர்பான விண்ணப்பங்களை அரசாங்க சேவை ஆணைக்குழு கோரியுள்ளது.

நாடுமுழுவதும் அமைந்துள்ள அரசாங்க நிறுவனங்களில் இலங்கைப் பொறியியலாளர் சேவையின் IIIஆம் தரத்தைச் சேர்ந்த சிவில் பொறிமுறை, புகையிரத திணைக்களத்தின் மின் மற்றும் மின் பொறியியல் ஆகிய துறைகளில் காணப்படும் 229வெற்றிடங்களுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கவே இப்போட்டிப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.

சிவில் துறையில் 162 பேருக்கும், பொறிமுறை துறையில் 15 பேருக்கும், மின் துறையில் 09 பேருக்கும், பௌதீகவளங்கள் துறையில் 42 பேருக்கும் இரசாயனத்துறையில் ஒருவருக்குமாக இவ்வெற்றிடங்கள் நிலவுகின்றன.

இதற்கு 21–35 வயதுக்குட்பட்ட தொழில்சார் தகைமைபெற்ற பொறியியலாளர்கள் மாத்திரமே விண்ணப்பிக்கமுடியும். விண்ணப்ப இறுதித் திகதி 25.09.2017 ஆகும்.

விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்துக் கூடுமாயின் திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தெரிவு இடம்பெறும். குறையுமாயின் பரீட்சையின்றி நேரடியாக நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தெரிவு இடம்பெறும் என பொது நிர்வாக முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அறிவித்துள்ளார்.