கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பெத்தான்குடி மக்களின் திருவிழா.

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 11ம் நாள் திருவிழா நேற்று(03) இடம்பெற்றது.

பெத்தான்குடி மக்கள், இத்திருவிழாவிற்கான உபயத்தினை வழங்கியிருந்தனர்.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது, கடந்த 24ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பானது.

கொடியேற்றத்தினைத் தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று எதிர்வரும் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், மறுநாள் காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.