மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரதிநிதியாகத்தான் நான் அமைச்சரவையில் இருக்கின்றேன்

( kamal  Vijay)

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருந்தாலும், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரதிநிதியாகத்தான் நான் அமைச்சரவையில் இருக்கின்றேன். 
நான் ஒரு தமிழன் என் மொழியின்மீதும் என் இனத்தின் மீதும் எனக்கு அயராத பற்று இருக்கின்றது. அது மாத்திரமின்னிறி தமிழன் என்ற திமிரும் எனக்கு இருக்கின்றது. எனவே தமிழ் மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல்கொடுப்பேன் நான் யாருக்கும் பயந்தவன் அல்ல என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரசகரும மொழிகள் அமமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாசிமடத்தில் ஞாயிற்றுக் கிழமை (03) நடைபெற்ற நடமானும்சேவையில் கலந்து கொண்டு மேற்படி நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகைகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதன்போது மேலும் கருத்து தெரிவிகையில்…

மட்டக்களப்பிலிருந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு எமது அமைச்சினால் புத்தகப்பைகளை வழங்குகின்றோம். காணாமலாக்கப்பட்டவர்களின் பிள்ளைகளையும் நாம் கவனத்திலெடுத்துதான் இதனை மேற்கொண்டுள்ளோம். இந்நிலையில் அரச சேவை மக்களுக்காக எனும் தலைப்பின் கீழ்தான் நாம் நடமாடும் சேவைகளை நடாத்தி வருகின்றோம். மக்கள் அரச திணைக்களைங்களை நாடிச் சென்று அவர்களது தேவைகளைப் பூரத்;தி செய்யமுடியாத விடத்து அரசாங்க சேவைகளை மக்கள் மத்தியில் கொ(kamal Vijay)ண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில்த்தான் இந்த நடமாடும் சேவை இடம்பெறுகின்றது. இதன்போது பொலிசேவை, மின்சாரசபை, ஓய்வூதிய திணைக்களம், அரச கரும மொழிகள் அமைச்சு, பிரதேச செயலகம். காணிசீர்திருத்த ஆணைக்குழு உள்ளிட்ட 20 அரச அமைப்புக்கள் கலந்து கொண்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டம் கடந்த காலங்களில் சொல்லொணாத் துன்பங்களைச் சந்தித்த மாவட்டம், தற்போது யுத்தம் முடிந்துவிட்டது என எல்லோரும் சொல்கின்றார்கள். யுத்தம் முடிந்துவிட்டாலும்கூட யுத்தம் நடைபெற்றதற்கான காரணங்களும், அடிப்படை மூலகாரணங்களும், இன்னும் கண்டறியப்படவில்லை யுத்தம் இல்லை என்றால் சத்தம் இல்லை. ஆனால் யுத்தம் இல்லை என்றால் பிரச்சனைகள் இல்லை என்று அர்த்தம் அல்ல. அரச அமைச்சர்கள் இங்கு வந்து யுத்தம் இல்லை, சத்தம் இல்லை என்று சொன்னால் நான் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டடேன். யுத்தம்தான் இல்லை ஆனால் மக்களிடம் பிரச்சனைககள் ஏராளம் இருக்கின்றன. இதுதான் உண்மை. இந்தப் பிரச்சனைகளுக்கு நாம் படிப்படியாக தீர்வு கண்டு கொண்டிரு;ககின்றோம்.

காணாமல் போனவர்களின் பிரச்சனைக்கும், காணாமல் போனவர்களுக்கும் பதிலைத் தேடித்தர வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது. காணாமல்போன கொடுமைகள் நடந்தது கடந்த மஹிந்த ராஜபக்கசவின் ஆட்சியிலே. அந்த ஆட்சியின் பாவங்களைத்தான் நாங்கள் தற்போது கழுவிக்கொண்டிருக்கின்றோம். இப்போதய ஆட்சியில் யாரும் கடத்தப்படுவதில்லை, யாரும் சட்டவிரோதமாக கொலை செய்யப்படுவதுமில்லை, இந்த வெற்றி நாம் அனைவரும் வாக்களித்து இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்ததால் கிடைத்தது என்பதை மறந்து விடக்கூடாது.

நான் ஒரு தமிழன் என் மொழியின்மீதும் என் இனத்தின் மீதும் எனக்கு அயராத பற்று இருக்கின்றது. அது மாத்திரமின்னிறி தமிழன் என்ற திமிரும் எனக்கு இருக்கின்றது. எனவே தமிழ் மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல்கொடுப்பேன் நான் யாருக்கும் பயந்தவன் அல்ல. நீதிக்கும், நேர்மைக்கும், மாத்திரம்தான் பணிந்தவன் நான். அதுபோல் நான் சகோதர சிங்கள மொழியையும், சகோரதரர்களிடத்திலும் பற்றும் பாசமும் வைத்துள்ளேன். இதுபோல் அனைவரும் உங்கள் மொழியில் பற்று வையுங்கள்.

இந்த நாடு தனி ஒரு இனத்திங்குச் சொந்தமான நாடு அல்ல. ஒருமொழி தேசிய மொழி அல்ல. சிங்களமும், தமிழும் ஆட்சிமொழி தேசிய மொழிகளாகும்.

இலங்கையில் நான்கு மதங்களும், தமிழர், சிங்களவர், இஸ்லாமியர், மாத்திரமின்றி, 19 இனக்குழுக்கள் கொண்ட நாடுதான் இலங்கை. நாம் அனைவரும் ஒரு நாட்டின் பிள்ளைகள் என்றால் அனைவரும் சமத்துவமாக இருக்கவேண்டும்.  அனால் மடட்டக்களப்பு மாவட்டதை எடுத்துக் கொண்டால் தேசியபாடசாலைகள் குறைவாக உள்ளன, அபிவிருத்திகள் போதாது, வைதியசாலைகளில் போதிய குறைபாடுகள் உள்ளன, இவைகளனைத்தையும் நாம் தரம் உயர்த்த வேண்டும். அதற்கு உரிய வேலைகளை நாம் செய்து கொண்டிருக்கின்றேன்.

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருந்தாலும், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரதிநிதியாகத்தான் நான் அமைச்சரவையில் இருக்கின்றேன் என்பதை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.  நான் இன்று பெரியகல்லாறு வைத்தியசாலையை தரிசித்து வந்துள்ளேன் அவ்வைத்தியசாலையை நாங்கள் தரமுயர்த்தவேண்டும் அதனை நான் நிச்சயமாக தரமுயர்த்துவேன். ஏன அவர் இதன்போது தெரிவித்தார்.