மண்டூர் பாலம் கணேசமூர்த்தியின் முயற்சியாம்.

மட்டக்களப்பு குருமண்வெளியிலிருந்து மாண்டூருக்கான பாலம் அமைப்பதற்கான எனது கோரிக்கை வெற்றியளித்துள்ளது….

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் மிக நீண்ட காலமாக முக்கியமான தேவையாக காணப்பட்ட மண்டூர் பாலத்திற்கு எனது வேண்டுகோளின் பெயரில் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் சிபார்சினால் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 1100 மில்லியன் ரூபா ஒத்துக்கப்பட்டு பாலம் அமைப்பதனை ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஸ்மன் கிரியல அவர்களின் பங்கபற்றுதலுடன: வேலைகள் ஆரம்பமாகும் என சோமசுந்தரம: கணேசமூர்த்தி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.்ல அவர்களின் பங்குபற்றலுடன் பாலம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது.

என்னுடைய முயற்சிகள் ஒவ்வொன்றாக வெற்றியளிப்பதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இவ் நிதி ஒதுக்கீட்டினை வேறு பிரதேசங்களிற்கு கொண்டு செல்வதற்கு பலர் முயற்சி செய்திருந்த போதும் அனைத்து தடைகளையும் தாண்டி எமது பிரதேசத்திற்கு இவ் நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக்கொடுத்துள்ளேன்.என்றும் எமது தமிழ் மக்களிற்காக எனது பணி தொடரும்..

என்றும் உங்களில் ஒருவன் சோ.கணேசமூர்த்தி