களுவாஞ்சிக்குடியில் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் நடமாடும் சேவை

தேசிய சகவாழ்வுகள் கலந்துரையாடல்கள் மற்றும் அரச கருமமொழிகள்அமைச்சர் மனோகணேஷன் தலைமையில் மண்முனை தென் எருவிற்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட   ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயத்தில் நல்லாட்சி அரசின் மாபெரும் நடமாடும் சேவை தொடரின் 14வது மாபெரும் நடமாடும் சேவை தற்போதுநடைபெற்றுவருகின்றது ..

நிகழ்வில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் ச.வியாழேந்திரன் ஆகியோருடன் கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல தேரரும் கலந்து கொண்டார்.

நடமாடும் சேவையில் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.