மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரிகள் ஆசிரியர்கள்

மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மேல் மாகாண நுண்கலை நிலையத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படவிருப்பதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் தொவித்துள்ளார். நியமனங்களைப் பெறுவோருக்கு நான்கு வார காலப்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இது தொடர்பான நிகழ்வில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்ள உள்ளனர்.