மாவடிமுன்மாரி கிராம மக்களுக்கு அடிப்படை உரிமைகள் சுதந்திரம் மற்றும் சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வூட்டல்

பனிச்சையடிமுன்மாரி, மாவடிமுன்மாரி கிராம மக்களுக்கு அடிப்படை உரிமைகள் சுதந்திரம் மற்றும் சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வூட்டல் இடம்பெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அக்ரட், சொன்ட், சட்டத்தரணிகள் சங்கம் இணைந்து வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுடைய அடிப்படை உரிமைகள் சுதந்திரம் மற்றும் சமத்துவம் என்பவற்றை அனுபவிக்கும் வகையில் அது தொடர்பான சட்டங்களை கைந்நூலாக வழங்கி அவை தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாகவே கடந்த 31.08.2017 அன்று மாவடிமுன்மாரி, பனிச்சையடிமுன்மாரி கிராம மக்களுக்கு விழிப்பூட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம உத்தியோகத்தர்கள்,கிராம மக்களுக்கும் நடைபெற்ற விழிப்பூட்டலில் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தரணி S.சிறிஸ்குமார்? சட்ட உதவி ஆனைக்குழு சட்டத்தரணி S.மிருதினி, சட்டத்தரணிகள் சங்க சட்டத்தரணி S.சரணியா பொலிஸ் உத்தியோகத்தர் S.குலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.