சிங்­கள மக்கள் மோச­மா­ன­வர்கள் அல்ல பயத்தை தோற்­று­விப்­பது அர­சி­யல்­வா­தி­களே

சிங்­கள மக்கள் மோச­மா­ன­வர்கள் அல்ல. ஆனால். சில அர­சி­யல்­வா­திகள் அவர்கள் மத்­தியில் புதிய அர­சி­ய­ல­மைப்பு மூலம் நாடு துண்­டா­டப்­படப் போகின்­ற­தென்ற பயத்தைத் தோற்­று­விக்க முயற்­சிக்­கின்­றனர் என்று  தெற்கு மத்­திய ஆசிய பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்­ஸிடம் எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டினார்.

 

அத்­துடன் இத­ய­சுத்­தி­யு­ட­னான அதி­காரப் பங்­கீடு இன்­றி­ய­மை­யா­தது. ஆகவே,  மக்கள் தொடர்ச்­சி­யாக வாழ்ந்­து­வரும் இடங்­களில்  தங்­க­ளது அன்­றாட விட­யங்­களில் தாமே முடி­வு­களை மேற்­கொண்டு செயற்­ப­டக்­கூ­டி­ய­தாக அதி­கா­ரப்­ப­கிர்வு அமைய வேண்டும் என்றும் எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்தன் வலி­யு­றுத்­தினார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கும், தெற்கு மத்­திய ஆசியப் பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்­மை­யா­ருக்கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று வெள்ளிக்­கி­ழமை காலை இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் இல்­லத்தில் நடை­பெற்­றது.

இதன்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் புளொட் தலைவர் சித்­தார்த்தன் எம்.பி, ரெலோ தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி ஆகி­யோரும் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

தெற்கு மத்­திய ஆசியப் பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்­ஸுடன் இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேஷாப்பும் மற்றும் உயர் அதி­கா­ரி­களும் பங்­கெ­டுத்­தி­ருந்­தனர்.

இச்­ச­ம­யத்தில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்தன்,  நாட்டில் ஏற்­பட்ட வன்­மு­றை­க­ளினால் தமிழ் மக்கள் ஒவ்­வொ­ரு­வரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு நாட்டில் எங்­க­ளது உரி­மை­களும் மறுக்­கப்­பட்­டுள்­ளன.  இதன் கார­ண­மாக 1.5 மில்­லி­யன்­க­ளுக்கு மேற்­பட்ட தமிழ் மக்கள் நாட்­டி­லி­ருந்து புலம்­பெ­யர்ந்­துள்­ளனர். நாட்டில் எஞ்­சி­யுள்ள தமிழ் மக்­க­ளா­வது உரிய கௌர­வத்­துடன் வாழ­வேண்டும். புலம்­பெ­யர்ந்­த­வர்கள் நாட்­டிற்குத் திரும்­பி­வர வேண்டும் என்று நாம் விரும்­பு­கின்றோம்.

இலங்­கையில் வாழு­கின்ற சகல மக்­க­ளி­னதும் கௌர­வத்தைக் காப்­பாற்­று­வ­தா­கவும், பேணக்­கூ­டி­ய­தா­கவும் அமையக் கூடிய புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். கடந்த காலங்­களைப் போலல்­லாது இம்­முறை அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கு­வதில் அதி­க­ள­வான ஆரம்­பக்­கட்ட நடை­மு­றைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இச் செயற்­பா­டுகள் தோல்­வி­ய­டைய இட­ம­ளிக்­கப்­படக் கூடாது.  அதி­காரப் பங்­கீடு விட­யத்தில்  இத­ய­சுத்­தி­யு­ட­னான அதி­காரப் பங்­கீடு இன்­றி­ய­மை­யா­தது. மக்கள் தொடர்ச்­சி­யாக வாழ்ந்­து­வரும் இடங்­களில்  தங்­க­ளது அன்­றாட விட­யங்­களில் தாமே முடி­வு­களை மேற்­கொண்டு செயற்­ப­டக்­கூ­டி­ய­தாக அவை அமைய வேண்டும்.

சிங்­கள மக்கள் மோச­மா­ன­வர்கள் அல்ல, ஆனால், சில அர­சி­யல்­வா­திகள் அவர்கள் மத்­தியில் புதிய அர­சி­ய­ல­மைப்பு மூலம் நாடு துண்­டா­டப்­படப் போகின்­ற­தென்ற பயத்தைத் தோற்­று­விக்க முயற்­சிக்­கின்­றனர். நாங்கள் நாடு பிரிக்­கப்­ப­டு­வதை விரும்­ப­வில்லை.  ஆனால், நாட்டில் வாழு­கின்ற ஒவ்­வொரு ஆணும் பெண்ணும் தாங்கள் இந்த நாட்­டுக்குச் சொந்­த­மா­ன­வர்கள். இந்த நாடு தங்கள் எல்­லோ­ருக்கும் சொந்­த­மா­னது என்று உண­ரக்­கூ­டிய வகையில் அமைய வேண்­டு­மென்றும்.  இந்த நாட்டில் இது­வரை காலமும் ஒவ்­வொ­ரு­வரும் கணிக்­கப்­பட்­டதைப் போல இனி­மேலும் நாங்கள் கணிக்­கப்­படக் கூடாது. இந்த நாட்டில் வாழு­கின்ற சிங்­கள மற்றும் முஸ்லிம் மக்­க­ளையும் சம­மா­ன­வர்­க­ளா­கவும் கௌர­வ­மா­ன­வர்­க­ளா­கவும் நாம் கணித்துச் செயற்­ப­டுவோம்.

இந்தச் சந்­தர்ப்­பத்தை நாம் தவ­ற­வி­டாது, உயர்ந்த அளவில் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாட்டில் இரண்டு பொிய கட்­சி­களும் இணைந்து செயற்­படும் முத­லா­வது சந்­தர்ப்பம் இது­வாகும்.  புதிய அர­சி­ய­ல­மைப்­புக்குப் பல்­வேறு கட்­சி­க­ளி­னதும் ஒப்­பு­தலைப் பெறக்­கூ­டிய வாய்ப்­புக்கள் உள்­ளது. அதனால் பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்று பின்னர் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு ஒன்­றி­னூ­டாக நாட்டு மக்­களின் அங்­கீ­கா­ரத்தைப் பெற முடியும் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கின்­றது.

இப்­பி­ரச்­சினை இனி­மேலும் இனம் சம்­பந்­தப்­பட்ட பிரச்­சினை மட்­டு­மல்ல. இலங்­கைவாழ் மக்கள் அனை­வ­ருக்கும் பயன் தரக்­கூ­டிய அதி­காரப் பகிர்வு சம்­பந்­தப்­பட்ட விட­ய­மாகும். எல்லா மாகா­ணங்­க­ளிலும் உள்ள முத­ல­மைச்­சர்கள் தமது மாகா­ணங்­க­ளுடன் தொடர்­பான விட­யங்­களைக் கையாள்­வ­தற்குத் தமக்கு மேலும் அதி­கா­ரங்கள் வேண்­டு­மெனத் தெரிவித்­தி­ருப்­ப­தாக நாம் அறி­கின்றோம் என்றார்.

அத்­தோடு ஆயுதப் படை­யினர் தங்­கி­யி­ருக்கும் தனியார் காணிகள்  விடு­விக்­கப்­பட்டு அதன் உரி­மை­யா­ளர்­க­ளுக்குக் கைய­ளிக்­கப்­பட வேண்டும். அக்­கா­ணி­க­ளுக்குத் திரும்பி வரு­வ­தற்கு அவர்கள் உரி­மை­யு­டை­ய­வர்கள். மக்கள் தமது காணி­களைக் கோரி ஆர்ப்­பாட்­டங்கள் நடத்தி வரும் இவ்­வே­ளையில் ஆயு­தப்­ப­டை­யினர் இக் காணி­களில் தங்­கி­யி­ருந்து அதனைத் தமது உப­யோ­கத்­துக்குப் பயன்­ப­டுத்த முடி­யாது. காணாமல் போன­வர்கள் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கு உட­ன­டி­யாகக் கவனம் செலுத்­தப்­பட்டு, நம்­பத்­த­குந்த விசா­ர­ணைகள் மூலம் உண்­மைகள் அறி­யப்­பட்டுக் காணாமல் போன­வர்­க­ளது குடும்­பங்கள் ஏதா­வது வகையில் மன ஆறுதல் அடை­வதை உறுதி செய்ய வேண்டும்.

கொடு­மை­யான பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை மாற்­றி­ய­மைப்­ப­தாக அர­சாங்கம் உத்­த­ர­வாதம் அளித்­தி­ருந்­த­போதும் அச்­சட்டம் இன்னும் மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வில்லை. இச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் இன்­னமும் நியா­ய­மற்ற வகையில் தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர் எனவும் எடுத்­து­ரைத்­துள்ளார்.

அத­னை­ய­டுத்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட  பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன்,  புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று உரு­வாக்­கப்­ப­டு­வ­தனால் தாங்கள் தோற்­றுப்­போ­ன­வர்­க­ளாகக் கரு­து­ப­வர்­களே இனவாத சிந்தனைகளைத் தூண்டுபவர்களாகச் செயற்படுகின்றனர்.   அரசியலமைப்பு மறுசீரமைப்புத் தொடர்பாக நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையின்படி நாடளாவிய ரீதியில் புதிய அரசியலமைப்பொன்று தேவை என்று மக்கள் கருதுகின்றனர் எனச் சுட்டிகட்டினார்.

இவற்றை கூர்மையாக செவிமடுத்த பதில் உதவிச் செயலாளர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு மற்றும் அதன் தலைவருக்கும் நன்றி கூறியதோடு, கொள்கையில் உறுதிப்பாடுடைய ஒரு தலைவரைச் சந்திக்கக் கிடைத்தமையையிட்டு தாம் பெருமையடைகின்றென். உங்களால் கவனத்திற்கு  கொண்டுவரப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடனான அதன் தொடர்புகளைத் தொடர்ந்தும் பேணிவரும் எனவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.