ஊடக ஜம்பவான் சின்னையா குருநாதன் வெள்ளிக்கிழமை காலை மரணமானார்.

– மூதுார்நிருபர் –

திருகோணமலையின் முத்த ஊடக ஜம்பவான் சின்னையா குருநாதன்  இன்று வெள்ளிக்கிழமை காலை மரணமானார்.

சிறிது காலம் சற்று தளர்வடைந்திருந்த இவர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின்  தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஸ்தாபகத்தலைவராக இருந்த இவர் சர்வதேசமறிந்த ஊடகவியலாளராவார்.

சுமார் 55வருடத்திற்கு மேலாக  ஊடகசேவையாற்றிய இவர் தமிழ்,ஆங்கில நாளிதழ்களுடன் இணைத்தளங்களிலும் பிரபல்யமாக எழுதி வந்தவராவார்.

திருகோணமலை பிரதான வீதியில் உள்ள 70ம்இலக்க வீட்டில்   கடந்த 1938.08.11இல் பிறந்த இவர் தனது ஊடகப்பணியை முதன்முதலில் வீரகேசரியில்  1957இல் ஆரம்பித்தார். அவ்வாறு தனது பணியை ஆரம்பித்த குருநாதன் தமிழ் பத்திரிகைத்துறையின் ஜம்பவானாக திகழ்ந்த  சிவனாயகம்மூலமாக  தினபதி ,சிந்தாமணிப்பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார்.

1985இல் வடக்கிற்கு இடம்பெயர்ந்த இவர் உதயன் பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றினார்.

1999இல் தினக்குரல், சண்டே ரைம்ஸ் போன்ற  பத்திரிகைகளுக்கும் எழதிய இவர் சிறந்த பத்தி எழுதாளராகவும் திகழ்ந்தார்.

மாமனிதர் சிவாராம் இருந்த காலத்தில் அவருடன் ஏற்பட்ட தொடர்புகாணமாக பல இணைத்தளங்களிலும் முக்கிய பொறுப்புக்களை எடுத்து ஊடகப்பணியாற்றிய பெருமையும் முக்கியமாக ஆங்கில புலமைகொண்ட தமிழ் ஊடகர் என்ற பெருமையும் இவருக்குண்டு.

போராட்ட காலத்தில் பல நெருக்கடிகளைச்சந்தித்து தனியே ஊடகப்பணியை மட்டுமுழுநேரத்தொழிலாக  நம்பி வாழ்வு நடாத்திய வர் என்ற பெருமையும் இவருக்குண்டு.இதனால் அதிக காலம் பொருளாதார நெருக்கடியுடன் பணிசெய்த இவர். பல விருதுகளைப்பெற்று  வாழ்நாள் சாதனையாளராக கௌரவம் பெற்று போற்றப்பட்ட இவர் இரண்டு  பிள்ளைகளின் தந்தையாவார்.

இன்நிலையில் இறுதி சுமார் இரண்டு வருடங்களாக சற்றுதளர்வடைந்திருந்த இவர் இன்று காலை இறைபதடைந்தார்.

இவரது இறுதி நல்லடக்க நிகழ்வுகள்  வரும் ஞாயிற்றுக்கிழமை 10.30 மணிக்கு திருகோணமலை பிரதான வீதியில் உள்ள 142ம் இலக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில்  நடைபெறஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.