பழுகாமம் ஸ்ரீ மஹா விஷ்னு ஆலயத்தில் இடம்பெற்ற கும்பாபிஷேகம்

(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு இயற்கை அன்னை எழில்கொஞ்சும்  திருப்பழுகாமம் ஸ்ரீ மஹா விஷ்னு தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்  31.08.2017ம் திகதி கிரியைகளும் பிரதிஷ்டா பிரதம குருவாக உகந்தமலை தேவஸ்தான பிரதமகுரு  க.கு.சீதாரம் குருக்கள்  தலைமையில் மிகவும் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது.
புனராவர்த்தன வைகானச மோக்த பஞ்சகுண்ட மஹாயாக அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருவிழா கடந்த 27.08.2017ம் திகதி கர்மாரம்பத்துடன் ஆரம்பமானது. 30.08.2017ம் திகதி காலை 7.00மணியிலிருந்து மாலை 5.00மணி வரை எண்ணெய்க்காப்பு இடம்பெற்று, 31.08.2017ம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.  24 நாட்கள் மண்டலாபிஷேக பூசைகள் இடம்பெற்று 24.09.2017ம் திகதி பாற்குடப்பவனி நடைபெற்று  சங்காபிஷேக(1008) நடைபெறும்.