திருப்பெருந்துறை பகுதியில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை குப்பைகளைக் கொட்டுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு ..

மட்டக்களப்பு – திருப்பெருந்துறை பகுதியில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை குப்பைகளைக் கொட்டுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது..

திருப்பெருந்துறை பகுதி மக்களால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் நீதவான் மா.கணேசராஜா தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதற்கமைய, திருப்பெருந்துறை பகுதியில் மட்டக்களப்பு மாநகர சபையூடாக சேகரிக்கப்படும் கழிவுகளையோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ எவரும் குப்பைகளைக் கொட்டக்கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது