மாடுகள் தீடிர் என மரணம் – பண்ணையாளர்கள் கவலை

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சைப்பகுதியில், வளர்க்கப்படும் மாடுகள் தீடிரென மரணிப்பதாக பண்ணையாளர்கள் புதன்கிழமை கவலை வெளியிட்டனர்.

மூச்சு திணறல் ஏற்பட்டு, கண்பகுதிகள் வீக்கமடைந்து, சளிவெளியில் தள்ளியே மாடுகள் மரணிப்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். 10நாட்களுக்குள் 20க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டனர். ஒரு பண்ணையில் ஐந்துக்கு மேற்பட்ட மாடுகளும் இறந்துள்ளதாகவும் கூறினர்.

இதனால் 1.4மில்லியன் ரூபாய் நட்டமடைந்துள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். மாடுகளின் மரணிப்பு  இன்றுவரை தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும், இதனால் மிகவும் கவலையுற்றிருப்பதாகவும் தெரிவித்தனர்.