சுபீட்­சத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் ஊட­கங்­க­ளுக்கும் இருக்­கின்­றன.

எம்.எஸ்.எம்.நூர்தீன்


நாட்டில் நல்­லி­ணக்­க­த்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஏற்­பட்­டுள்ள சிறந்த சந்­தர்ப்பம் இது­வாகும். இந்த சந்­தர்ப்­பத்­தினை நாம் தவறவிட்டால் இவ்­வா­றான ஒரு சந்­தர்ப்பம் நமக்கு இனி ஏற்­ப­டாது என தேசிய ஒற்­று­மைக்­கான பாக்­கிர்­மாக்கார் நிலை­யத்தின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அத்­துடன், பிரி­வினைவாத யுத்தம் முடி­வ­டைந்து பிரி­வினைவாத அர­சியல் வேற்­றுமை தோன்­றி­யுள்­ளது. இது நாட்டின் நல்­லி­ணக்­கத்­திற்கு பேர­பத்­தாகும் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு மட்­டக்­க­ளப்பில் திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற எழுத்­தா­ணிக்­கான தன்­ன­டக்கம் எனும் நல்­லி­ணக்க நேய கிழக்கு மாகாண ஊடக செய­ல­மர்வின் ஆரம்ப வைப­வத்தில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

மட்­டக்­க­ளப்பு பிறட்ச் விவ் விடு­தியில் தேசிய ஒருங்­கி­ணைப்பு மற்றும் நல்­லி­ணக்க அமைச்சின் அனு­ச­ர­ணை­யுடன் தேசிய ஒற்­று­மைக்­கான பாக்­கீர்­மாக்கார் நிலை­யத்­தினால் இந்த செய­ல­மர்வு நடாத்­தப்­பட்­டது.

இந்த நாட்டில் நல்­லி­ணக்­கத்­திற்­கான சந்­தப்பம் ஏற்­பட்­டுள்ள நிலையில் இந்த சந்­தாப்­பத்­தினை நழுவவிடக் கூடாது.
இந்த நாட்டில் சுபீட்­சத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு அனை­வ­ருக்கும் உண்டு. அதில் குறிப்­பாக ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் ஊட­கங்­க­ளுக்கும் இருக்­கின்­றன.

அனை­வரும் ஒன்­றி­ணைந்­துள்ள இந்த சந்­தர்ப்பம் இந்த நாட்டில் நல்­லி­ணக்­க­தத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஏற்­பட்­டுள்ள சிறந்த சந்­தர்ப்­ப­மாகும். இந்த சந்­தாப்­பத்­தினை நாம் தவற விட்டால் இவ்­வா­றான ஒரு சந்­தர்ப்பம் நமக்கு இனி ஏற்­ப­டாது.

பிரி­வினைவாத யுத்தம் முடி­வ­டைந்து பிரி­வினை அர­சியல் வேற்­றுமை தோன்­றி­யுள்­ளது. சந்­தேகம், பயம் அச்சம் என்­பன புறந்­தள்­ளப்­பட்டு நிலை­யான சக­வாழ்வும் மகிழ்ச்­சியும் ஏற்­பட வேண்டும்.

சந்­தி­ரிகா பண்­டார நாயக்க குமா­ர­துங்க ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது ரணில் விக்­கி­ரம சிங்க பிர­த­ம­ராக இருந்தார். அந்­தக்­கா­லத்­திலும் இந்த நல்­லி­ணக்­கத்­திற்­கான வாய்ப்­பி­ருக்கவில்லை. பின்னர் மஹிந்த ராஜ­பக்ச யுத்­தத்­தினை முடித்த போதிலும் அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்­தி­ருந்த நிலையில் அதை அவர் நிறை­வேற்றவில்லை. இந்த நிலை­யில்தான் இன்று இந்த நல்ல சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ளது.

மூன்று மொழி­க­ளுக்­காக நமது நாட்டில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உயிர்கள் இழக்­கப்­பட்­டுள்­ளன.மாவட்ட சபை­களை கலைத்து பல உயிர்ச்­சே­தங்­க­ளுக்கு மத்­தியில் மாகாண சபைகள் உரு­வாக்­கப்­பட்­டன. ஆனால் பிரச்­சி­னைகள் தீர­வில்லை.

இப்­போது காலம் கனிந்­துள்­ளது. இரா.சம்­பந்தன் எதிர்க்கட்சித் தலை­வ­ரா­கவும் அனை­வரும் ஒன்­று­பட்­டுள்ள நிலையில் ஐக்­கிய இலங்­கைக்குள் ஒரு தீர்­வினை நோக்கி நகர்­கின்ற இன்­றைய சந்­தர்ப்­பத்தை நாம் முழு­மை­யாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த அடிப்­ப­டையில் வெலி­கம பிர­க­ட­ணத்தை மீளாய்வு செய்ய நாம் புறப்­பட்டபோது இந்த நல்­லி­ணக்க ஊடக வேலைத்­திட்­டத்­தினை நாம் செய்­வ­தற்கு சந்­தர்ப்பம் ஏற்­பட்­டது.

எமது தேசிய ஒற்­று­மைக்­கான பாக்­கீர்­மாக்கார் நிலையம் பணத்தை வைத்துக் கொண்டு செய்யவில்லை. வெளி­நாட்டு நிதி நிறு­வ­னங்­களின் நிதி பங்­க­ளிப்பு எமக்­கில்லை.

இந்த நிலையில் இந்த நல்­லி­ணக்க வேலைத்­திட்டத்தினை மேற் கொள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேனவிடம் கேட்ட போது அவர் அதற்­காக தேசிய ஒருங்­கி­ணைப்பு மற்றும் நல்­லி­ணக்க அமைச்சின் அனு­ச­ர­ணையை வழங்­கினார்.

இதை ஏற்­னவே பல மாகா­ணங்­களில் செய்து முடித்­துள்ளோம். இதை அனைத்து மாகா­ணங்­க­ளிலும் செய்த பின்னர் நாம் இந்த உடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்து ஜனாதிபதி மற்றும் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் முன்னிலையில் எமது பிரகடனத்தை நாம் முன்வைப்போம் அதற்கு அனைத்து ஊடகவியலாளர்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.

இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஊடகவியலாளர்கள் பங்குபற்றினர்