பழுகாமம் பிரதானவீதியில் வெள்ளநீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து செய்ய முடியவில்லை.

-க.விஜயரெத்தினம்)
பழுகாமம் பிரதான வீதியில் அடிக்கடி பெய்யும் மழை காரணமாக பிரதான வீதியில்  போக்குவரத்து செய்யமுடியவில்லை என பிரதேச பொதுமக்கள், பொதுமக்களின் பிரதிநிதிகள் கவலை தெரிவிக்கின்றார்கள்.,

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் முக்கியத்துவமிக்க பழம்பெரும் கிராமமாக பழுகாமம் விளங்குகின்றது.இங்குள்ள பிரதான வீதியானது குன்றும் குழியுமாக சேதமடைந்து சுமார் இரண்டு வருடங்களாக காணப்படுகின்றது.
இதனால் வீதியில் சிறப்பாக பயணிக்க முடியவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். ஏன்னென்றால் இப்பிரதேசத்தில் அடிக்கடி பெய்யும் மழை காரணமாக இவ்வீதியில் காணப்படும் குழிகளிலில் மழைநீர் தேங்கி காணப்படுகின்றது.இதனால் பிரதான வீதியானது மழைகாலங்களில் வெள்ளக்காடாக காட்சி தருகின்றது.இதனால் இவ்வீதியில் பயணிக்கும் பொதுமக்கள்,மாணவர்கள்,அரச ஊழியர்கள் பாரிய சிரமத்தை நாளாந்தம் எதிர்கொள்கின்றார்கள்.
வீதியில் பயணிக்கும் பொதுமக்களுக்கு தேங்கி நிற்கும் கழிவு நீரினால் தங்களின் ஆடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது.சுமார் இரண்டு கிலோமீற்றர் வீதியானது இவ்வாறு சேதமடைந்து மழைநீர் தேங்கியிருப்பதானால் போக்குவரத்து செய்ய முடியவில்லை.இதுசம்பந்தமாக உரிய அதிகாரிக்கு தெரியப்படுத்தியும் வந்து பார்த்து விட்டுச் செல்கின்றார்களே தவிர பிரதான வீதியை மீள்புனரமைப்புக்குரிய ஆரோக்கியமான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவில்லை என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
பழுகாமம் பிரதான வீதியூடாக ஊடறுத்து ஆலயங்களுக்கும்,விவசாய வேலைகளுக்கும்,பாடசாலைகளுக்கும்,அரச கடமைகளுக்கும் செல்லும் பொதுமக்கள்,அரச ஊழியர்கள்,மாணவர்கள் பாரிய சிரமத்தை எதிர்கொள்வதாக கவலை தெரிவிக்கின்றார்கள்.இதேவேளை பொதுமக்களிடம் சென்று வாக்குகளைப்பெற்ற அரசியல்வாதிகள் வாய்மூடி மௌனிகளாக இருப்பதாக பொதுமக்கள் குறிப்பிடுகின்றார்கள்.பழுகாமம் பிரதான வீதியின் அவநிலையை கருத்திற்கொண்டு வெல்லாவெளி பிரதேச செயலாளர், பிரதேச சபைச்செயலாளர்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், அரசியல்வாதிகள் போன்றோர்கள் காத்திரமான கவனம் எடுத்து பழுகாமம் பிரதான வீதியை மக்களின் போக்குவரத்திற்கு ஏற்றவகையில் புனரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள்