நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது – ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா!

பெண்கள் சமத்துவத்தை பேணக்கூடிய வகையில் மட்டுமல்லாது அவர்களது வாழ்வாதாரத்திலும் முன்னிலையை வகிக்கக்கூடியதான கொள்கைத்திட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது..

இத்திட்டத்தை நாம் எதிர்காலத்திலும் நிச்சயமாக முன்னெடுத்துச் செல்வோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மகளிர் பேராளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மகளிர் பேராளர் மாநாடு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் நேற்றையதினம்(30).வெகு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மகளிர் பேராளர் மாநாடு இன்றையதினம் கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுகலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாக இருக்கவேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் நாம் எமது கட்சியில் அந்த வகிபங்கை 50 வீதத்திற்கும் அதிகமாக மேம்படுத்துவதே எமது நோக்கமாகும்.இந்நிலைமையில் பெண்களின் மேம்பாட்டுக்கான வகிபாகத்தை முன்னேற்றும் வகையில் அனைத்து செயற்பாடுகளுக்கு நாம் வழிகாட்டியாக இருந்து செயற்படுவோம்.

அந்த வகையில் பெண்கள் சமூகத்திற்கு வழிகாட்டும் வழிகாட்டிகள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது .பெண்கள் தாயாகவும் தாரமாகவும் இருந்து சமூகத்திற்கான பொறுப்பை உணர்ந்து பாடுபடவேண்டும்.

எனவே எதிர்காலத்தில் கிடைக்க்கூடிய சந்தர்ப்பங்களை உரிய முறையில் பயன்படுத்தி எமது கட்சியின் பலத்திற்கு வலுச்சேர்ப்பார்கள் என நம்புகின்றேன்.

எனவே கட்சியை நம்பும் உங்னகளதுஎண்ணங்கள் நம்பிக்கையானதாக அமையப்பெறும் என்றும் தெரிவித்தார்