துப்பாக்கி உதிரிப்பாகங்களுடன் சம்மாந்துறை பொலிசாரினால் ஒருவர் கைது

(டினேஸ்)

பாவனைக்கு உதவாத துப்பாக்கியின் பாகங்களை கொண்டு மரத்தினால் துப்பாக்கி செய்ய முயன்ற நபர் ஒருவர் சம்மாதுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்..

உடங்கா 2 பிரதேசத்தைச் சேர்ந்த  43 வயது மதிக்கத்தக்க ஒருவரே அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாதுறை பொலிஸ் பெருங்குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அந்தவகையில் மூன்று கிழமைக்கு முன்பு வயல் பாலடைந்த வீட்டின் இருந்து கண்டெடுக்கப்பட்ட பையில் இருந்த பாவனைக்குதவாத  துப்பாக்கி பாகங்களை வைத்து துப்பாக்கி செய்ய முற்பட்ட நேரமை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்தெரிவித்தார்.

நாளை இவரை சம்மாந்துறை நிதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலதிக விசாரணை சம்மாதுறை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.