பேசிவிட்டு போகின்ற அரசியல் “ஆள்” அல்ல

..1940 முதல் 2017வரையான வரலாற்றை பற்றி மட்டும் மணிக்கணக்கில் பேசிவிட்டு போகின்ற அரசியல் “ஆள்” அல்ல, நான். வரலாற்றை திரும்பி பார்த்து, விட்ட தவறுகளை ஏற்று, அவற்றை திருத்திக்கொண்டு, இன்று இனி நாம் போக வேண்டிய பயணம் என்ன, போக கூடிய பயணம் என்ன என்பவைகளை கலந்துரையாடும் நண்பன், நான் என  தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் இன்று(30) பதிவிட்டுள்ளார்.