சபாநாயகர், உள்ளூராட்சி தேர்தல்: சட்டத்தில் நாளை கையொப்பம்

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய நாளை 31ஆம் திகதி கையொப்பமிட இருப்பதாக சபாநாயகரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

சபாநாயகர் கையொப்பமிடுவதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய ஏனைய நடவடிக்கைகளை துரிதமாக பூர்த்தி செய்யுமாறு சபாநாயகர் கரு ஜெயசூரிய சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அலோசனை வழங்கியுள்ளார். அதன் பின்னர் நாளை அதில் கையொப்பமிடுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலம் கடந்த 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இதற்கு ஆதவாக 120 வாக்குகள் வழங்கப்பட்டன. எதிராக யாரும் வாக்களிக்கவில்லை.

2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலம் கடந்த ஜூன் 20 ஆம் திகதி மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சட்டத்தை நிறைவேற்றினால் சாதாரண தர பரீட்சைக்கு முன்னர் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் அறிவித்திருந்தது தெரிந்ததே. (