முனைப்பின் வாழ்வாதாரத் திட்டத்தினுடாக சில்லறைக் கடை

.
முனைப்பு நிறுவனத்தின் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பாவற்கொடிச்சேனை கண்ணகிநகர் கிராமத்தில் வாழ்வாதாரமின்றி கஸ்ரப்பட்ட வறிய குடும்பத்திற்கு சிறிய சிலல்லறைக் ஒன்று கடை ஆரம்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தாயான க.ராணி தனது கணவனை இழந்து தனது பிள்ளைகளை கஸ்ரப்பட்டு வளர்த்து வந்த நிலையில் தனது மூத்த மகளும் இறந்தனை அடுத்து அவருடைய மூன்று பேரப்பிள்ளைகளையும் வளர்க்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இப் பிள்ளைகளுக்கான உணவு மற்றும் பாடசாலை செலவுகளை மேற்கொள்ள முடியாத வயோதிபத் தாய் ஐயாயிரம் ரூபாவிற்குட்பட்ட பொருட்களுடன் வீட்டில் கடை ஆரம்பித்து நடாத்தி வருவதுடன் அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினை முனைப்பு நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதனை அடுத்து கடந்த மாதம் குறித்த தாயின் இடத்துக்குச் சென்று பார்வையிட்ட முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் வீட்டுடன் இணைந்த கடையினைத் திருத்தி தருவதுடன் கடைக்காக ஒருதொகை முதலிடும் செய்து தருவதாக தெரிவித்திருந்தார்.

அதற்கமைய கடைக்கு கதவு போட்டுத் திருத்தி கொடுத்ததுடன் கடைக்கான முதலிடும் வழங்கப்பட்டதனை அடுத்து நேற்று ஞாயிற்றுக் கிழமை சம்பிர்தாய பூர்வமாக முனைப்பு நிறுவன நிருவாகிகளால் கடை திறந்து வைக்கப்பட்டது.
முனைப்பு ஸ்ரீ லங்கா நிறவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் மற்றும் பொருளாளர் அ.தயானந்தரவி.நிருவாக சபை உறுப்பினர் அ.துரைராசாசிவம் ஆகியோர் கலந்துகொண்டு கடையினை திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது..