மட்டக்களப்பில் திண்மக் கழிவுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் கழிவுகள் கொட்டப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாழைச்சேனையூடாக திருபெருந்துறைக்கு செல்லும் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணிமுதல் திருபெருந்துறை கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபையூடாக சேகரிக்கப்படும் கழிவுகளை தமது கிராமத்திற்குள் கொட்ட வேண்டாம் என தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.

இன்று காலை முதல் கழிவுகளை கொண்டு செல்லும் வாகனங்களை மறித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

newsfirst