மட்டக்களப்பு தபால் திணைக்கள ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய  சம்பள  நிலுவையை  வழங்க கோரி   இன்று  காலை 10 மணியளவில் மட்டக்களப்பு தபால் திணைக்கள ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்  குதித்துள்ளனர் .

 

104 பேருக்கு சுமார்  87 இலட்சம்   ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாகவும் அதன் அடிப்படையில் 4000 ரூபாய் முதல் 283,500 ரூபாய்  வரை  ஒருவருக்கு வழங்க வேண்டியுள்ளதாகவும் வலியுறுத்தினர்.

குறித்த விடயம் தொடர்பாக மிக விரைவில் தங்களுக்குரிய நிலுவை சம்பள தொகையை வழங்கவேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் தலைமை தபால் காரியாலயத்துக்கு முன்பாக தங்களது எதிர்ப்பை  வெளிப்படுத்த நேரிடும் எனவும் தெரிவித்தனர்.

10 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட  இந்த ஆர்ப்பாட்டம் தபால் திணைக்களத்தில் இருந்து பேரணியாக காந்தி சதுக்கத்துக்கு  சென்று தொடர்ந்து திருமலை மற்றும் கல்முனை வீதி வழியாக மீண்டும் தபால் திணைக்களம் வரை முன்னெடுக்கப்பட்டது.