ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஷ்பராஜ் வெற்றி!

தென் கொரி­யாவின் சோல் நகரில் வெள்­ளி­யன்று நிறை­வு­பெற்ற 51ஆவது ஆசிய கட்­டு­மஸ்­தான உட­ல­ழகர் மற்றும் உட­ல­மைப்பு விளை­யாட்­டுத்­துறை வல்­லவர் போட்­டியில் இலங்­கையின் உடற்­கட்­டு­மஸ்­தான வீரர் லூசியன் அன்டன் புஷ்­பராஜ் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆசிய கட்­டு­மஸ்­தான உட­ல­ழகர் மற்றும் உட­ல­மைப்பு விளை­யாட்­டுத்­துறை சம்­மே­ளனம் ஏற்­பாடு செய்­தி­ருந்த இப் போட்­டிகள் ஆகஸ்ட் 20ஆம் திகதி ஆரம்­பித்து 26ஆம் திகதி நிறை­வு­பெற்­றது. இந்த சம்­மே­ள­ன­மா­னது ஆசிய ஒலிம்பிக் பேர­வையில் அங்கம் வகிக்­கின்­றது.
100 கிலோ கிராம் எடைப்­பி­ரிவில் பங்­கு­பற்­றிய லூசியன் அன்டன் புஷ்­பராஜ் தங்கப் பதக்­கத்தை வென்­ற­துடன் இந்த எடைப்­பி­ரி­வுக்­கான ஒட்­டு­மொத்த சம்­பியன் பட்­டத்­தையும் சூடினார்.
லூசி­யனின் வெற்­றியை ஜீர­ணிக்க முடி­யாத சிலர் அவ­ர்மேல் தவ­றான கருத்­துக்­களை வெளி­யி­டு­வது கவ­லைக்­கு­ரி­யது என விமர்­ச­கர்கள் குறிப்­பிட்­டனர்.
இவ் வருடப் போட்­டியில் 26 ஆசிய நாடு­களைச் சேர்ந்த 350க்கும் மேற்­பட்ட கட்­டு­மஸ்­தான உட­ல­ழ­கர்கள் எட்டு வெவ்­வேறு எடைப் பிரி­வு­களில் போட்­டி­யிட்­டதனைக் குறிப்­பிட்ட சம்­மே­ளனம் அங்­கீ­காரம் பெற்ற ஒன்று இது என்­ப­தற்கு சான்று பகர்­கின்­றது. அத்­துடன் தென் கொரிய சங்­கமும் தமது நேர்­மைத்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.
குவைத்தில் கடந்த வருடம் நடைபெற்ற வவான் க்ளசிக் எக்ஸ்போ 2016 சர்வதேச பளுதூக்கலில் இவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.