டிசம்பரில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி முன்னர் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறும் பட்சத்தில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் தாமதமாகும். அதற்கு மாறாக சட்டமூலம் நிறைவேறாது போனால் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி  மூன்று மாகாணங்களுக்கும் தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் மொஹமட் தெரிவித்தார்.

 

ஒரு வேளை உள்ளூராட்சி மன்ற தேர்தல் மற்றும் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் ஒரு காலப்பகுதியில் வரும் பட்சத்தில் எமக்கு எந்தவொரு சிக்கலும் ஏற்படாது. ஒரு சிக்கலும் இல்லாமல் வெவ்வேறு தினங்களில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றதேர்தல் மற்றும் மூன்று மாகாண சபை தேர்தல் குறித்து வினவிய போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின மேலதிக ஆணையாளர் மொஹமட் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.