முன்னால் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்

(டினேஸ்)
அரசாங்கத்தினால் வழங்கப்படும் அபிவிருத்திகளிலும் வீட்டுத்திட்டங்களிலும் முன்னால் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் புறக்கணிக்கப்படுவதாக புணர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் வடிவேல் சசிகுமார் குற்றம் சாட்டுகிறார். இன்று (26) காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்ற புணர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் புணர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பங்கள், முன்னால் போராளிகளுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வைத் தொடர்ந்து உரையாற்றும் போதெ அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்……….
30 வருடகால கொடிய யுத்தத்தில் எமது மண்ணுக்காக போராடிய எமது மாவீரர்கள், முன்னால் போராளிகள் மற்றும் குடும்பத்தினர் தற்போது ஏதோ ஒருவகையில் அச்சுறுத்தப்படுகின்றனர் அது மட்டும் அல்லாது அபிவிருத்தி என்று அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகளின் போது அவர்களது தகவல்கள் அரசாங்கத்தினரிடம் இல்லை என புறக்கணிக்கப்படுகின்றனர் ஆனால் ஒரு விதத்தில் முன்னால் போராளிகள் மாவீரர் குடும்ப உறுப்பினர்களின் தகவல்களை சீ.ஜ.டீ என அழைக்கப்படும் அரச புலனாய்வு பிரிவினர்களினால் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றின் முலமாக இவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றனர். ஏன் அபிவிருத்தி என்று வருகின்ற நேரங்களில் எங்களது தகவல்கள் எங்கு சென்றன விசாரணை எனும் போது எவ்வாறு அத்தகவல்கள் வெளிக்கொணரப்படுகின்றன.
அந்தவகையில் தற்போது உள்ள சூழ்நிலையில் எமது கட்சியின் செயற்பாடாக எமக்கான போராடியவர்களின் வாழ்வாரத்தினை மேம்படுத்துவதேயாகும் அதன் ஒருபகுதியான இன்று நாம் இந்த செயற்பாடை முன்னெடுக்கின்றோம் இனி எதிர்வரும் காலங்களில் எமது கட்சிக்காகவும் ஒன்றியத்திற்காகவும் உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதுடன் அம்பாரை மட்டக்களப்பு மாவட்டங்களின் உள்ள போராளிகள் மாவீரர் குடும்ப உறுப்பினர்களுக்கான வாழ்வாதார உதவிகளை செய்யவுள்ளதாகவும் கருத்துத் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது அம்பாரை மாவட்ட மகளீர் பிரிவு இணைப்பாளர் எஸ். சுமித்திரை மட்டக்களப்பு மாவட்டத்தின் இணைப்பாளர் அ.கமலதாஸ் உட்பட காரைதீவு பிரதேச மாவீரர் குடும்பங்கள் உறுப்பினர்கள் முன்னால் போராளிகள் பலரும் கலந்து கொண்டனர்.