காணாமல் ஆக்கப்பட்டோரை வைத்து சுயலாபமடைய எவரும் முயற்ச்சிக்க வேண்டாம். பாதிக்கப்பட்ட உறவுகள் உருக்கமான வேண்டுகோள்

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா  இல்லையா  என்று ஜனாதிபதி உடனடியாக  பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்து வடக்கு கிழக்கெங்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்   உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.  

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மார்ச் மாதம் 8 ம் திகதி ஆரம்பித்த போராட்டம்  இன்று 173 ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக தொடர்ந்து வருகிறது. அதேபோன்று கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மாசி  மாதம் 20 ம் திகதி ஆரம்பித்த போராட்டம்   இன்று 189  ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது

இவ்வாறே  வவுனியாவில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மாசி  மாதம் 24  ம் திகதி ஆரம்பித்த போராட்டம்   இன்று 185  ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது அதேவேளை மருதங்கேணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மார்ச் மாதம் 15 ம் திகதி  இன்று 166  ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது

அவ்வாறே திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மார்ச் மாதம் 2 ம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று 179  ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த,இராணுவத்திடம் கையளித்த  கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை  முன்னெடுத்துள்ளனர்.

 

இது இவ்வாறிருக்க எதிர்வரும் 30 ம் திகதி சர்வதேச கானாமலாக்கப்பட்டோர் தினம் அனுஸ்ரிக்கப்படவுள்ள நிலையில் புலம்பெயர் தேசங்களின் நிதியுதவிகளை பெற்று தமது நிறுவனங்களினதும் அமைப்புகளினதும் இருப்பை தக்கவைத்து சுய இலாபம் அடையவும் மக்கள் மாதக்கணக்கில் போராட்டங்களை நடாத்தும் போது பங்களிப்பு செய்யாது இப்போது தமது இருப்புக்களை தக்க வைக்க பல்வேறு இடங்களின் போராட்டங்களை செய்து மக்களை குழப்பும் செயற்ப்பாடுகளில் ஈடுபடுவதாகவும்

 

இதனைவிட அரசியல் வாதிகள் தாங்கள் ஒருபுறமாக போராட்டங்களை நடாத்தப்போவதாக அறிவிக்கின்றனர் எனவே தங்களது இருப்புக்களை தக்கவைப்பதை தவிர்த்து போராட்டத்திலீடுபடும் மக்களோடு இணைந்து அனைவரும் போராட முன்வருமாறும் தமது அரசியல் இலாபங்களுக்காகவும் அமைப்புக்கள் நிறுவனங்களின் சுய இலாபங்களுக்குமாக செயற்ப்பட வேண்டாமென பதிக்கப்பட்ட மக்கள் வேண்டி நிக்கின்றனர்

 

பல்வேறு தரப்பினர் வெவ்வேறு இடங்களுக்கும் பதிக்கப்பட்ட  மக்களை அழைப்பதனால் அவர்கள் குழப்ப நிலையில் உள்ளார்கள் எனவே தனித்தனியாக அரசியலுக்காகவோ அல்லது அமைப்புக்கள் நிறுவனங்களின் சுய இலாபங்களுக்காகவோ செயற்படாது மாதக்கணக்கில் போராடிவரும் மக்களின் போராட்டத்தோடு இணைந்து அனைவரையும் போராட வருமாறு பதிக்கப்பட்ட மக்கள் மிகவும் உருக்கமான வேன்டுகோள் விடுக்கின்றனர்

 

எமக்காக குரல் கொடுக்க விரும்புபவர்கள் எங்களுடைய போராட்ட இடங்களுக்கு வருகைதந்து எமக்கு ஆதரவு வழங்குமாறும் புலம்பெயர் தேசத்து உறவுகள் எமக்காக உங்களது நாடுகளின் பாரிய போராட்டங்களை அன்றைய நாளின் செய்யுமாறும் கோரியுள்ளனர்